உலகம்

‘எக்ஸ் யூத் அபியாஸ் 21’ எனும் அமெரிக்க இந்திய ராணுவ கூட்டு பயிற்சி அலாஸ்காவில் துவங்கியது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அலாஸ்கா:

இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி 17-வது முறையாக இணைந்து நடைபெறுகிறது. “எக்ஸ் யுத் அபியாஸ் 2021”-ல் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக 350 வீரர்களை கொண்ட இந்திய ராணுவ குழு அமெரிக்காவில் உள்ள எல்மெண்டோர்ஃப்-ரிச்சர்ட்சன், அலாஸ்கா கூட்டு பயிற்சி மையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

Indian Army to take part in Joint Military Training Exercise with US Army  in Alaska - India News

இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக 2021 அக்டோபர் 15 முதல் 29 வரை இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இரு நாடுகளாலும் இணைந்து நடத்தப்படும் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் ராணுவப் பயிற்சியாகும்.

ALSO READ  சர்வதேச Midwife தினம்...
US and Indian troops start joint exercise as Joe Biden seeks to build up  Quad as counterweight to China | South China Morning Post

இரு ராணுவங்களுக்கிடையே புரிதல், ஒத்துழைப்பு மற்றும் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதை இந்த பயிற்சி நோக்கமாக கொண்டுள்ளது. குளிர் பருவ நிலைகளில் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் குறித்த பகிர்தல்கள் மற்றும் ஒரு தரப்பின் சிறந்த செயல்முறைகளை மற்றொரு தரப்பு கற்று கொள்ளுதல் ஆகியவை இந்த கூட்டு பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும்.

Indo-US joint military exercise met all objectives: Army | Latest News India  - Hindustan Times

மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்று இந்த கூட்டுப் பயிற்சியின் போது ராணுவ வீரர்களுக்கு மூத்த அதிகாரிகள் பயிற்சி அளிப்பர்.

ALSO READ  இலங்கையின் சுகாதாரத்துறை மந்திரி பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா :
India, US to carry out joint Military Exercise "Yudh Abhyas 2019"

கடினமான காலநிலைகளில் ராணுவ வீரர்கள் போர்சூழலை எவ்வாறு சமாளிக்க வேண்டும், குளிர் பிரதேசங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்று இருநாட்டு வீரர்களும் இந்த 14 நாள் பயிற்சியில் கற்றறிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2030ம் ஆண்டுக்குள் காடுகள் அழிவைத் தடுக்க கிளாஸ்கோ மாநாட்டில் புதிய ஒப்பந்தம்

News Editor

அமெரிக்காவில் போராட்டத்தின்போது போலீஸாரிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இஸ்லாமியர்கள்- வைரல் வீடியோ….

naveen santhakumar

நிஜ பறவை இறகுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இயந்திர பறவை

Admin