உலகம்

சர்வதேச Midwife தினம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகம் முழுவதும் இன்று Midwives Day  கொண்டாடப்படுகிறது.

Midwife என்பவர் பேறுகாலப் பெண்களுக்குத் துணைபுரியும் பயிற்சி பெற்ற ஒருவர், அதாவது பேறுகாலப் பெண் பணியாளர். இவர்கள் பேறுகாலத்தில் தாயையும் சேயையும் பத்திரமாக பாதுகாப்பதில் முக்கியமான இடத்தைப் வகிக்கிறார்கள்.

எனவே இவர்களை அங்கீகரிக்கும் விதமாகவும் இவர்களுக்கு கௌரவம் சேர்க்கும் விதமாகவும் மே 5 உலக மீட்பர் தினமாக கொண்டாடப்படுகிறது.

தற்பொழுது பிரசவங்கள் அனைத்தும் மருத்துவமனைகளில் தான் நிகழ்கிறது. ஆனால் பல தலைமுறைகளுக்கு முன்னர் பிரசவம் பெரும்பாலும் இல்லங்களிலேயே நிகழ்ந்தது. அந்த பிரசவத்தில் தாய-சேய் இருவரையும் பத்திரமாக பாதுகாப்பதிலும் பிரசவத்தை பாதுகாப்பாக மேற்கொள்வதிலும் இவர்களின் பங்கு அளப்பரியது.

பின்னணி:-

ALSO READ  விண்வெளியில் ஒரு புதிய சகாப்தம்.. ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1!

1987-ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற International Confederation of Midwives-  மாநாட்டில் இவர்களுக்கு அங்கீகாரமும் கவுரவமும் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மே 5 தினமாக 1991 முதல் கொண்டாடப்படுகிறது.

இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இத்தினத்தை கடைபிடிக்கின்றன. 2014ம் ஆண்டு முதல் ஈரான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் இந்த தினத்தை கடைபிடித்து வருகின்றனர்.

ஏன் இந்த தினத்தை கொண்டாட வேண்டும்:-

இவர்கள் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான உயிர்களை காக்கிறார்கள்.

ஒருகட்டத்தில் இவர்களின் பற்றாக்குறை பெருமளவில் ஏற்பட்டது. அப்பொழுது பேறுகால இழப்புகள் பெருமளவில் ஏற்பட்டன.

ALSO READ  குழந்தைபேறு பெற திருமூலர் கூறிய வழிகள்.

இந்தப் பேறு கால இழப்புகள் 1990களில் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அதற்கு காரணம் அதிக அளவில் திறன் வாய்ந்த அவர் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இவர்கள் பெண் உரிமைகளைப் பாதுகாப்பதில் மிக முக்கிய போராளிகள். 

தாயையும் சேயையும் பத்திரமாக பாதுகாத்து, புதிய உயிரை பாத்திரமாக பூமிக்கு கொண்டுவருபவர்கள். எனவே நிச்சயம் இவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

இந்த வருடத்திற்கான Midwives தின ஆய்வுபொருள் (Theme):-

Celebrate, Demonstrate, Mobilise, Unite – our time is NOW!!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஷ்ய நாட்டு தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்:

naveen santhakumar

கொரோனா பரவல்: மாஸ்க் தட்டுப்பாட்டை போக்க இந்தியர் கண்டுபிடித்த புதிய வழிமுறை….

naveen santhakumar

பூமிக்கு ஆபத்தை விளைவிக்குமா ராட்சச கல்…??????

Shobika