தமிழகம்

பொது இடங்களில் குப்பை கழிவுவுகளை கொட்டினால் ரூபாய் 5000 வரை அபராதம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

சென்னையில் பொது இடங்களில் குப்பை கழிவுவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடுகளும், கட்டுமான கழிவுகளால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

Gurugram: Driver fined Rs 5K for spreading garbage

சுகாதார சீர்கேடுகளை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை கழிவுகளை வீசுபவர்கள் மீதும் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன் படி அபராதம் விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ALSO READ  பூட்டிய வீடு….காத்திருந்தது அதிர்ச்சி...
BBMP collects close to 8L in littering penalties | Deccan Herald

பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பையை வீசுபவர்கள், வாகனங்களில் இருந்து குப்பையை கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதமும், தரம் பிரிக்கப்படாத குப்பையை கொட்டுபவர்கள், தனிநபர் இல்லங்களுக்கு ரூ.100 அபராதமும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1,000 அபராதமும், பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Plastic burning chokes Kozhikode residents

அதுபோன்று பொது இங்களில் கட்டிட இடிபாடுகளை கொட்டுபவர்களுக்கு 1 டன் வரை ரூ.2,000 அபராதமும், 1 டன்னிற்கு மேல் ரூ.5,000 அபராதமும், தோட்ட கழிவுகள், மரக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு ரூ.200 அபராதமும், கழிவுநீர் பாதை, கால்வாய், நீர்நிலைகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதமும், திடக்கழிவுகளை எரிப்பவர்கள், தனியார் இடங்களுக்கு ரூ.500 அபராதமும், பொது இடங்களுக்கு ரூ.1,000 அபராதமும் வசூலிக்கப்படும், என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ALSO READ  பெரியார் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
Fine Of Rs 10,000 Would Be Imposed On People Found Littering Public Places

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சின்னி ஜெயந்த் மகன்!….

naveen santhakumar

வாகன ஓட்டிகளுக்கு அதிரடி அறிவிப்பு!!!

Shanthi

மருத்துவமனையிலிருந்து நாளை வீடு திரும்புகிறார் சசிகலா..!

News Editor