லண்டன்:-
பிரிட்டனைச் சேர்ந்த டோமினிக் (31) மற்றும் டேனியல் ஹக்மன் (25) தம்பதிகளின் ஒரு வயது மகள் வில்லோ ரோஸ் பிரக்ஸிட்டுக்கு பிறகான முதல் நீலநிற பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார்.

பிரிட்டனில் பர்கண்டி நிற பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிய பிறகு (Brexit) பிரிட்டனின் பாஸ்போட் நீலநிறமாக மாற்றப்படும் என்று அறிவித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் டேனியல் ஹக்மன் தனது மகள் வில்லோ ரோஸ்-க்கு பாஸ்போர்ட் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இவருக்கு இந்த நீல நிற பாஸ்போர்ட் கிடைத்துள்ளது.
1921 ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் நீலநிற பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. பின்னர், பிரிட்டன் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்ததை அடுத்து பர்கண்டி நிற பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகியதை அடுத்து தனது பாஸ்போர்ட்டை மீண்டும் பழைய நீல நிறத்தை மாற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
