உலகம்

செந்தில் தொண்டமானின் தீவிர முயற்சியால் 23 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த மாதம் 13ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களையும் அவர்களுடைய இரண்டு படகையும் யாழ்ப்பாணம் கோவளம் கடற்கரை பகுதியில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 தினங்கள் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இதனை அடுத்து தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்று சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் தீபாவளி திருநாளுக்கு புத்தாடை இனிப்புகளை வழங்கியதுடன் விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என சிறையில் இருந்த மீனவர்களுடன் செந்தில் தொண்டைமான் உறுதி அளித்ததுடன் தமிழக மீனவர் சங்கத் தலைவர் களுக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தார்

ALSO READ  இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தீபாவளி பிரார்த்தனை!

அவர் கொடுத்த உறுதியின் அடிப்படையில் மீனவர்கள் 23 பேரும் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது மீனவர்கள் பிடிப்பதற்கான அனைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் இருபத்தி மூன்று பேரும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும் ஓரிரு தினங்களில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கையை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல் இடையே தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் வெற்றி… 

naveen santhakumar

தேச துரோக வழக்கில் முஷாரப்பிற்கு மரண தண்டனை

Admin

கொரோனா வைரஸை தடுக்கக்கூடிய 77 வேதியல் பொருட்களை கண்டறிந்தது சூப்பர் கம்ப்யூட்டர்…..

naveen santhakumar