உலகம்

கொரோனா பரவல் இடையே தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் வெற்றி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிங்கப்பூர்:-

கொரோனா வைரஸ் பரவல் அச்சத்துக்கு இடையே சிங்கப்பூரில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி(பிஏபி) கட்சி 83 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி(டபிள்யுபி) எப்போதும் இல்லாத வகையில் 10 இடங்களைக் கைப்பற்றியது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலை மீறி பாராளுமன்ற தேர்தல் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 8:00 மணிக்கு முடிந்தது. வாக்களிக்க வழக்கமான வழங்கப்படும் நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டு இருந்தது. 

ALSO READ  யோகா செய்தால் கொரோனாவில் இருந்து தப்பலாம் - ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல்.....

முககவசம், கையுறைகள் அணிந்தபடி பாதுகாப்பாக மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.  வாக்களித்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  இதில், ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் போட்டியிட்ட 93 இடங்களில் 90 சதவிகித இடங்களில் ஆளும் கட்சி வெற்றி பெற்றது. 

தேர்தல் முடிவுகளை அறிவித்த அதிகாரி.

அதாவது, மொத்த வாக்குகளில் 61.26 சதவிகித வாக்குகளை ஆளும் கட்சி பெற்றது. அதேவேளையில், எதிர்க்கட்சியான 10 இடங்களை பெற்றுள்ளது. 

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லூங் (68) (Lee Hsien Loong) :-  

ALSO READ  பிரிட்டனிலிருந்து சிங்கப்பூருக்கு பரவியது புதிய கொரோனா வைரஸ் ...!

நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வலுவான வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் அளித்துள்ள சிறந்த வெற்றி இது. 61 சதவித வாக்குகள் என்பது மிகவும் மதிப்புமிக்கது என்று நான் கருதுகிறேன் என்றார்.  

கடந்த 2015- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்கள் செயல் கட்சி,  69.9 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. சிங்கப்பூரில் கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் ஆட்சியே தொடர்வது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஈராக் எர்பில் விமானநிலையத்தின் மீது ஆயுதமேந்திய ட்ரோன் தாக்குதல்..!

Admin

லெபனான் குண்டுவெடிப்பின் பின்னணி… 

naveen santhakumar

180 பயணிகள்.. உடல் சிதறி பலி.. திக் திக் நிமிடங்கள்.

Admin