உலகம்

சீன அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு விசா கிடையாது- அமெரிக்கா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

சீனாவின் அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு அமெரிக்காவில் விசா வழங்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் தேசியச் செயலாளர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

சீனாவின் அரசு அதிகாரிகளும், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் (சீன மக்கள் குடியரசு) திபெத்தின் பகுதிகளில் வெளிநாட்டவர் குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகள் வருவதற்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருவது, மேலும் திபெத் பகுதியில் சீனா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். 

சீனாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் திபெத்தியர்கள்.

திபெத்தின் சுய ஆட்சிக்கும் திபெத்தியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாம்பியோ தெரிவித்தார்.

ALSO READ  விண்வெளியில் ஒரு புதிய சகாப்தம்.. ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1!

மேலும், கடந்த வாரம் ஹாங்காங்கின் உரிமைகளை பறிக்கும் வகையில் சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தை (New Security Law) அமல்படுத்தியது. இது அனைத்து நாடுகளுக்கும் ஏற்பட்ட அவமரியாதை (Affront) என்று கூறினார்.

கடந்த மாதமே ஹாங்காங்கில் ஒடுக்குமுறைக்கு (Crackdown) காரணமானவர்களுக்கு விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் முக்கியமான நதிகளின் சுற்றுச்சூழலைக் காக்கத் தவறிவிட்டதாகவும் சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் அரசு அதிகாரிகள், கம்யூனிஸ்ட் கட்சியின்  அதிகாரிகளுக்கு விசா வழங்கப்போவதில்லை என்று மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுவதற்கு முன்பே வர்த்தகப் போட்டி காரணமாக அமெரிக்கா சீனா இடையே உறவில் விரிசல் உரசல்கள் ஆரம்பித்தது. அதன்பிறகு கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவியது முதல் அமெரிக்கா இடையிலான  உரசல்கள் உச்சத்தைத் தொட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாகவே சீனாவை தாக்கி அறிக்கைகள் விட ஆரம்பித்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரப்பியது சீனாதான் என்று குற்றம்சாட்டினர். மேலும் சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பும் (WHO) அதன் தலைவர் டெட்ரோஸ்-ம் செயற்படுவதாக குற்றம் சுமத்தி உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றியது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தடுப்பூசி போடாதவர்களுக்கு டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் – பேராசிரியர் சாரா வாக்கர்

News Editor

காபூல் விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

News Editor

செப்டம்பர் 22: உலக காண்டாமிருகங்கள் தினம்

News Editor