உலகம்

கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய சீனா; சீனா உருவாக்கியுள்ள செவ்வாய் கிரக நகரம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்ஸு:-

சீனா ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக பூமியிலேயே மார்ஸ் கேம்ப் (Mars Camp) என்ற பெயரில் செவ்வாய் கிரகம் போன்ற நகரம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

சீனாவின் வடமேற்கில் உள்ள கன்ஸு மாகாணத்தில் (Gansu Province) சீனாவின் பெட்ரோலிய நகரமான லெங்கு நகரிலுள்ள லென்கு ஏரி (Lenghu Lake) பகுதியில் இந்த செவ்வாய் நகரத்தை உருவாக்கி உள்ளார்கள்.

இந்த செவ்வாய் நகரம் உருவாக்கப்பட காரணமான சீனாவின் கனவு திட்டமான செவ்வாய் கிரகத்திற்கான டியான்வென் 1 (Tianwen1) விண்கலம் இன்று உள்ளூர் நேரப்படி பகல் 12.41 மணிக்கு ஹெய்னான் தீவிலுள்ள (Hainan Island) வெண்சாங் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து (Wenchang Satellite Launch Center) சீனாவின் மிக நீளமான ராக்கெட்டான மார்ச் 5 என்ற ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இந்த டியான்வென் 1 விண்கலத்தில் ஆர்பிட்டர் மற்றும் ரோவர் இரண்டும் இணைந்துள்ளது.

courtesy.

இந்த விண்கலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலத்தோடு ஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய்க்கான விண்கலமும் ஏவப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் தனது செவ்வாய் கிரகத்திற்கான முதல் விண்கலத்தை ஜப்பான் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  வாரம் 4 நாட்கள் அலுவலகம் வந்தால் போதும்
Tianwen1

முன்னதாக சீனா செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளை உள்நாட்டிலேயே மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்ஸு மாகாணத்தில் இந்த செவ்வாய் நகரை உருவாக்கியது. இங்கு விண்வெளி வீரர்களுக்கு செவ்வாய் கிரகம் செல்வது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதோடு செவ்வாய் கிரகம் செல்ல விரும்புபவர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ALSO READ  கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மருந்து : சீன சுகாதார கமிஷன்

இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி தரப்படுவதோடு நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவுகிறது. ஏனெனில் இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதால் சீனாவிற்கு அன்னிய செலாவணி அதிகளவில் கிடைக்கிறது.

ஏனெனில் செவ்வாய் கிரகத்தில் உள்ளது போன்ற சுற்றுச்சூழல் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தப் பகுதி சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கிறது. தற்பொழுது கொரோனா காரணமாக சுற்றுலாப் பயணிகள் வராவிட்டாலும் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு உதவுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவிலேயே மோசமான மொழி ‘கன்னடம்’-மன்னிப்பு கேட்ட கூகுள்….

Shobika

நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்… பிரிட்டன் மற்றும் ஜெர்மனி புதிய திட்டம்…

naveen santhakumar

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு !

News Editor