லைஃப் ஸ்டைல்

பெண்களின் மன நிலையை கூறும் லிப்ஸ்டிக் ஜோதிடம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வண்ணங்கள் என்பது நமக்கு மிகவும் பிடித்தவை. அதனால்தான் நாம் அதிகம் அணியும் உடைகள் அல்லது பயன்படுத்தும் பொருட்களை நமது பிடித்த வண்ணத்தில் தேர்வு செய்கிறார்கள்.

இதுவே தான் உதட்டுச் சாயத்திற்கும் காரணம். அதே சமயம் நமக்கு பிடித்த நிறம் நம்முடைய மன நிலையையும், ஆளுமையை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.

லிப்ஸ்டிக் பெண்களின் அழகை கூட்டுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் நிறம் அவர்களின் ஆளுமையைப் பற்றியும் நிறையவே சொல்கிறது. 

நீங்கள் யாரேனும் ஒரு பெண்ணை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், அவர்களின் உதட்டுச்சாயத்தின் நிறத்தை வைத்தே நீங்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது. 

​பீச் நிற உதட்டு சாயம் (Peach Color Lipstick):-

பீச் நிற லிப்ஸ்டிகை விரும்பும் பெண்கள் அவர்களின் வேலையில் கவனமாக இருப்பார்கள். இந்த நிறத்தை விரும்பும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மற்றவர்களின் குறுக்கீட்டை விரும்புவதில்லை.

தங்கள் தொழில் குறித்து மிகவும் அக்கறையுடன் மற்றும் கவனமாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இயற்கையிலேயே மிகவும் அமைதியானவர்களாகவும், சத்தம் அதிகம் பிடிக்காதவர்களாக இருப்பார்கள்.

இளஞ்சிவப்பு நிறத்தை விரும்பும் பெண்கள் (Pink Color):-

பெண்கள் இளஞ்சிவப்பு உதட்டுச்சாயம் விரும்பினால், அவர்கள் சிரிக்கவும் கேலி செய்யவும் விரும்புபவர்களாக இருப்பார்கள். அவர்கள் மனதில் யார் மீதும் பொறாமை கொள்ளாதவர்களாவும் இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் நண்பர்கள் கூட்டத்துடன் இருப்பார்கள். வீடாக இருந்தாலும் சரி, பணியிடமாக இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலும் அனைவருக்கும் பிடித்தவராக இருப்பார்கள்.

ALSO READ  சில மனிதர்கள் - சில நினைவுகள் பகுதி -10 (வரலாறு)

பிளம்ஸ் நிற லிப்ஸ்டிக் விரும்பினால் (plum lipstick):-

ஒரு பெண் பிளம் லிப்ஸ்டிக் (கருஞ்சிவப்பு) நிறத்தை விரும்பினால், அத்தகைய பெண்களுக்கு சவால் விடுவதிலும், அதை முடித்துக்காட்டி அதில் மகிழ்ச்சி அடையக் கூடியவர்களா இருப்பார்கள். ஆம், வேலையை முடித்தே தீருவேன் என சவால் விட்டால் அதை முடிக்கும் வரை ஓயமாட்டார்.

வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்சினைகள் கூட அவர்களின் மன உறுதியைக் கெடுப்பதில்லை. அது வீடு அல்லது பணியிடமாக இருந்தாலும், அவர்கள் தங்கள் பொறுப்புகளை நேர்மையாக நிறைவேற்றக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் உறுதியானவர்கள்.

நிர்வாண வண்ண உதட்டுச்சாயத்தை விரும்பக் கூடியவர்கள் (Nude Color Lipstick):-

ஒரு பெண் நிர்வாண வண்ண உதட்டுச்சாயம் (Nude color lipstick)ஐ விரும்பினால், அவர்கள் மிகவும் சோதனை செய்யும் இயல்புடையவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். அவர்கள் ஒவ்வொரு நாளும் யாரையாவது, எதையாவது பரிசோதனை செய்து கொண்டே இருப்பார்கள்.

இவர்களும் சற்று கூட்சப்படுபவர்களாகவும் இருப்பார்கள். தங்களின் நம்பிக்கை மூலம் தங்களை முன்னேறக்கூடியவர்களாக இருப்பார்கள்.

மூவ் நிற உதட்டுச் சாயம் (Move Lip Color):-

வெரி டஃப் டு அன்டர்ஸ்டேண்ட் பெண்கள் இவர்கள். ஆம், ஒரு பெண் மூவ் லிப்ஸ்டிக் விரும்பினால், அந்த பெண்ணை புரிந்துகொள்வது எளிதல்ல. 

அவன் மனதில் ஒன்றும், அவன் முகத்தில் வேறு ஏதோ இருக்கும். அதனால் அவரைப் பார்த்து அவரின் மனதில் இருப்பதை அறிவது கடினம்.

அவர்களும் தங்கள் எண்ணங்களை யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. இந்த நிறத்தை விரும்பும் பெண்கள் மிகவும் மர்மமானவர்கள் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ  பொங்கல் பூஜை செய்வது எப்படி?…நல்ல நேரம் எது?

சிவப்பு நிற லிப்ஸ்டிக் (Red color lipstick):-

மிகவும் பொதுவான லிப்ஸ்டிக் நிறம். ஒரு பெண் சிவப்பு உதட்டுச்சாயத்தை விரும்பினால், மிகவும் தைரியமானவள், இயற்கையில் நம்பிக்கையுள்ளவள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவள் எப்போதும் தன்னைப் பற்றி அறிந்திருக்கக் கூடியவராக இருப்பார்.

இவர்கள் நிறைய அலங்கரிக்க விரும்புவார்கள். அதனால் வீட்டிலேயே இருந்தாலும், வெளியில் செல்லும் நேரமாக இருந்தாலும் அவர்களின் துணை அல்லது அவரை சுற்றி இருப்பவர்களுக்கு எப்போதும் பிடித்த நபராக இருப்பார்கள்.

சரி, எந்த ராசிக்காரர்கள் எந்த நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம்:-

மேஷம்- மெரூன் நிறம் (Maroon) 

ரிஷபம்- பேடல் பிங்க் (Petal Pink)

மிதுனம்- பிரகாசமான சிவப்பு (Bright Red)

கடகம்- நிர்வாண பவள நிறம் (Coral Nude)

சிம்மம்- ஃபியரி ஆரஞ்ச் (Fiery Orange)

கன்னி- ஊதா கலந்த இளஞ்சிவப்பு (Purple Toned Pink)

துலாம்- நிர்வாண நிறம் (Nude Shade)

விருச்சிகம்- ஆழ்ந்த ப்ளம் நிளம் (Deep Plum) 

தனுசு- தூசி நிறைந்த ரோஜா நிறம் (Dusty Rose)

மகரம்- வறுத்த அடர் பிரவுன் (Toasted Brown-Hued)

கும்பம்- பெர்ரி இளஞ்சிவப்பு (Berry Pink Shade)

மீனம்- முத்து நிறம் (Pearlescent)

எது எப்படியோ நீங்கள் உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் உள்ள லிப்‌ஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்கவும் என்பது சிறிய டிப்ஸ்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விரைவில் மாதவிடாய் வரவைப்பதும்? தாமதப்படுத்துவது எப்படி?

naveen santhakumar

பாத வெடிப்பை குணப்படுத்தனுமா இதோ சில வழிகள்!

Admin

வியக்கவைக்கும் கிளி மனிதன் இவர் தான்!

Admin