உலகம்

உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மே 31 இன்று உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த வருடத்திற்கான புகையிலை எதிர்ப்பு தின தீம்- “Protecting Youth From Industry Manipulation And Preventing Them From Tobacco And Nicotine Use”.

பின்னணி:-

புகையிலையினால் ஏற்படக்கூடிய நோய்தொற்று மற்றும் அதனால் நிகழக்கூடிய மரணங்கள் குறித்து உலக அளவில் மக்களிடையே கவனத்தை ஈர்க்கும் விதமாக, முதன்முதலில் புகையிலை எதிர்ப்பு நாள், ஏப்ரல் 7ஆம் தேதி, 1988ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனத்தின் 40வது ஆண்டு விழாவின் போது கடைபிடிக்கப்பட்டது. பின்னர், ஆண்டுதோறும் மே 31ஆம் நாள் புகையிலை எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

புகையினால் ஏற்படும் பாதிப்புகள்:-

ALSO READ  உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருக்கு கொரோனாவா????

புகையிலையால் உலகில் ஒவ்வொரு நிமிடமும் 10 பேர் உயிரிழக்கின்றனர். ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் கொடிய வேதிப்பொருட்கள் ஆகும். 

புகை பிடிப்பதனால் புற்றுநோய் ஏற்படும். புகை பிடிப்பதால் மூச்சி இறைப்பு, மயக்கம், இருமல் ஏற்படும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் மரணம் கூட ஏற்படலாம். 

ஏனெனில் கார்பன் மோனாக்சைடு உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம்.

ALSO READ  வால்வுடன் கூடிய N-95 முகக்கவசம் அணிவது ஆபத்தானது - மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை… 

ஒவ்வோர் ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதால் உலகில் 70 லட்சம் பேர் பலியாகின்றனர். புகையிலை தன் உயிரைக் கெடுக்கும் அடுத்தவன் உயிரையும் கெடுக்கும். 

பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் 12 கோடி பேர் புகைக்கின்றனர். புகையிலையால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் கேன்சர், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. 

இதை விளக்கும் வகையில் உலகின் 78 நாடுகளில், புகையிலை பாக்கெட்டுகளில், அதன் தீங்கு குறித்து பெரிய அளவில் எச்சரிக்கை விளம்பரம் இடம்பெற்றுள்ளது.

எனவே நாம் புகையிலையை விட்டொழிப்போம் என உறுதி கொள்வோம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் செவிலியர் மரணம்.. கணவர் கவலைக்கிடம்… மகளுக்கு தீவிர சிகிச்சை…

naveen santhakumar

நடுவரின் ஷூவை தொட்டதால் ஜோகோவிச்க்கு 20000 அமெரிக்க டாலர் அபராதம்

Admin

விளையாட்டால் விளைந்த விபரீதம்…..துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு…..

naveen santhakumar