உலகம்

உலக நாடுகளை அச்சுறுத்திய கொடிய வைரஸ் நோய்களின் தொகுப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தற்போது உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது COVID-19 (Coronavirus disease-2019). இதனால் லேசாக இருமும் அல்லது தும்மும் நபரை பார்த்தாலே பயம் ஏற்படுகிறது. தவிர, தினசரி கொரோனா வைரஸ் குறித்த செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதுபோல் இதற்கு முன்பு உலகை அச்சுறுத்திய கொடிய வைரஸ்கள் குறித்த தொகுப்பு.

பிளேக் (Plague of Justinian, 541CE- 542 CE)

கிழக்கு ரோமானியப் பேரரசு என்று முன்பு அழைக்கப்பட்ட பைஸாண்டியன் பேரரசின் தலைநகர் கான்ஸ்டாண்டிநோபிளை நகரை முற்றிலுமாக சிதைத்தது ஜஸ்டீனியன் பிளேக் நோய்.

விலங்குகளில் இருந்து பரவிய இக்கிருமி ஏறக்குறைய 30-50 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

ஆனால் அந்த காலத்தில் பிளேக் நோய் மருத்துவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பது தெரியவில்லை

புபோனிக் பிளேக் ( Bubonic Plague 1346- 1353)

14 ஆம் நூற்றாண்டில் ‘பிளாக் டெத்’ (Black Death) என்ற பிளேக் நோய் எறத்தாழ 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களை காவு கொண்டது.

பின்னர் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மீண்டும் மீண்டும் இங்கும் அங்குமாக இந்நோய் உலகெங்கிலும் தோன்றி இருக்கின்றது.

‘த கிரேட் லண்டன் பிளேக்’ (The Great London Plague) கடைசியாக 1664-66 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் பரவியது.

லண்டனில் ஏற்பட்ட ‘மாபெரும் லண்டன் தீ’யினால் (The Great London Fire), (1666 செப்டம்பர் 2- 5 வரை) தலைநகரில் பிளேக் கட்டுக்குள் அடங்கியது.

யெர்சீனியா பெஸ்டிஸ் (Y. pestis) என்ற பாக்டீரியா, பெரும்பாலும் கொறித்துண்ணிகளான எலிகளில் வாழ்கின்றன. எலிகளில் ஒட்டுண்ணியாக வாழும் தெள்ளுப்பூச்சிகளே (flea) பிளேக் நோய் பரவ முக்கியக் காரணம்

ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் இந்நோயினால் 7.5 கோடி பேர் இறந்தனர் என்று கூறப்படுகிறது. இதற்கு தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டாலும் இன்றுவரை புபோனிக் பிளேக் நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.

காலரா ( Cholera 1852- 1860)

விபிரியோ காலரே (Vibrio cholerae) எனப்படும் பக்டீரியாவினால் உண்டாகும் சிறுகுடலில் பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றக்கூடிய குடலழற்சி (gastroenteritis) நோய் ஆகும்.

ALSO READ  ஒரே நாளில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

இப்பக்டீரியாவைக் கொண்ட உணவு அல்லது நீரை அருந்துவதன் மூலம் இந் நோய் மனிதருக்குத் தொற்றுகிறது. மிகக் கடுமையான வகை வாந்திபேதி மிகவிரைவாக இறப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்.

பல்வேறு காலகட்டங்களில் உருவான காலரா 1852 ஆம் ஆண்டு இந்தியாவில் பரவியது .

கங்கை நதியின் மூலமாக ஆசியா முழுவதும் பரவிய காலரா ஐரோப்பா ஆப்பிரிக்கா அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பரவியது உலகம் முழுவதும் சுமார் 10 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். இதனை தொடர்ந்து 1997-ம் ஆண்டு கால தொடர் இந்தியாவில் மீண்டும் ஏற்பட்டது 2006 வரை நீடித்த அந்த நோய்க்கு 6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இறந்ததாக உலக சுகாதார அமைப்பின் தெரிவித்தது. இந்த நோய் தற்போது இந்தியாவிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

இன்ஃபுளுவென்சா (Spanish Flu 1918-1920)

இந்த கொடூர வைரஸிற்கு ஸ்பானிஷ் ஃப்ளூ (ஸ்பானிஷ் லேடி) என்று பெயரிடப்பட்டிருந்தது. 1914 ஜூலை துவங்கி 1918 நவம்பர் வரை நடைபெற்றது முதலாம் உலகப்போர்.

இந்த தொற்று நோய் எங்கு? எப்போது? எப்படி? பரவ துவங்கியது என்பது குறித்த தகவல்கள் இல்லை. எனினும் முதலாம் உலக போரின் போது ஸ்பானிஷ் பத்திரிகைகள், போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பா முழுவதும் பரவும் நோயை பற்றிய விவரங்களை வெளியிட்டதால் அதற்கு ஸ்பானிஷ் ஃப்ளூ என்று பெயரிடப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டில் முதன்முதலாக H1N1 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த பெயர் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

1918,1919 ஆகிய 2 ஆண்டுகளில் உலகமெங்கும் கோரத்தாண்டவமாடியது.

இன்ஃப்ளூயன்சா தொடர்புடைய பன்றிக்காய்ச்சல் ஆயிரத்து 1976 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவியது. இன்ஃப்ளூயன்சா வகை தொற்று நோயால் உலகம் முழுவதும் இதுவரை 5 கோடி மக்கள் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது

ஆசிய சளி காய்ச்சல் ( Asian Flu (H1N1) 1956- 1958)

இன்புளுவென்சா நோய் வைரஸ் காரணமாக ஏற்படும் மற்றொரு நோய் ஆசிய சளிக்காய்ச்சல்.

சீனாவிலிருந்து 1956ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த வைரஸ் ஹாங்காங், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியது.

ALSO READ  ஒரு மாத ஊரடங்கு; இன்று முதல் அமலுக்கு வருகிறது !

அமெரிக்காவில் மட்டும் சுமார் 70,000 மக்கள் இந்த ஆசிய சளி காய்ச்சலால் உயரிழந்தனர். உலகம் முழுவதும் ஒன்று முதல் நான்கு மில்லியன் மக்கள் வரை உயிரிழந்துள்ளனர்.

1957-ம் ஆண்டு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் 1958 ஆம் ஆண்டு மீண்டும் ஏற்பட்டது.

1968ஆம் ஆண்டு இந்நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கப்பட்டு முற்றிலுமாக இந்நோய் ஒழிந்தது.

ஜிகா வைரஸ் (Zika Virus 2015)

மனிதர்களை ஏடிஸ் கொசு கடிப்பதினால் இந்த வைரஸ் தொற்று ஏற்படுகிறது. பிரேசில் நாட்டில் முதன்முதலாக பரவத்தொடங்கியது.

பின்னர் தென் அமெரிக்கா முழுவதும் பரவி வட அமெரிக்காவுக்கும் பரவியது இதுவரையில் 29 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.

இந்த வைரஸ் காரணமாக ஏற்படும் காய்ச்சல் மற்ற நோய்களை விட மாறுபட்டது. அதாவது கர்ப்பிணி பெண்களை ஏடிஸ் கொசு கடிப்பதன் மூலம் தொற்று ஏற்பட்டு வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் மூளையை பாதிக்கும்.

மேலும் சிறிய தலையுடன் பிறக்கும் இதுவரை 2,400 குழந்தைகள் இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

எபோலா (Ebola Virus- 1976)

எபோலா 1976 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் உள்ள எவ்வாறு அதுக்கு தான் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது

இது மனிதர்களையும் குரங்குகளையும், மனிதக்குரங்கு வகைகளையும் பாதிக்கும். கடுமையான உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோயாகும். வைரசால் உண்டாகும் இந்நோய் விலங்குகளில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது.

எபோலா பாதித்த நோயாளிகள் 90% பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

அப்போது எபோலா வைரஸ் தாக்கி சுமார் 280 பேர் உயிரிழந்தனர். மீண்டும், 2003 மற்றும் வட ஆப்பிரிக்க நாடான கினியாவில் எபோலா கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே மாதத்தில் மொத்த ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவியது. இதுவரை 14,000 மக்கள் எபோலா பாதிப்பு அடைந்துள்ளனர் இந்த எபோலா நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காபூல் மசூதி அருகே குண்டுவெடிப்பு; பொதுமக்கள் பலி..!

Admin

காதலிக்க பெண் தேடிய கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட சோகம்

Admin

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் :

Shobika