உலகம்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை…. தோலின் நிறம் கருப்பாக மாறிய மருத்துவர்கள்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வூஹான்:-

உலக அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேவேளையில் இந்த வைரஸ் பல்வேறு விதமான பரிமாணங்களையும் எடுத்து வருகிறது முதலில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஆண்மை தன்மை பறிபோகிறது என்று தகவல் வெளியானது. இதற்கு அடுத்ததாக வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவை உணரும் திறன் மற்றும் வாசனையை நுகரும் திறன் ஆகியவை பாதிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கொரோனா வைரஸின் பூர்வீகமான சீனாவில் இரண்டு மருத்துவர்களின் தோல் நிறம் கருமையாக மாறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அறை உருவாகியுள்ளதாக பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பலருக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா வைரஸ் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா குறித்து முதன்முதலில் எச்சரிக்கை விடுத்து, அரசாங்கத்தால் பொய் செய்தி பரப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பின்னர் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கப்பட்ட இடித்துரைப்பாளரான டாக்டர் லீ வென்லியாங்-ன் நண்பர்களான Dr. Yi Fan மற்றும்  Dr. Hu Weifeng ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததன் விளைவாக இவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. கடந்த ஜனவரி 18ம் தேதி இவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முதலில் இவர்கள் வூஹான் நகரில் உள்ள நுரையீரல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் Xincheng மாகாணத்திலுள்ள Zhongfa நகரில் Tongji மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

ALSO READ  துபாயில் இருந்து நாடு திரும்பும் வெளிநாட்டினர்- காரணம் என்ன?

Dr. Yi  முறை இருதய சிகிச்சை நிபுணர் ஆவார். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ECMO (Extracorporeal membrane oxygenation) எந்திரத்தின் மூலமாக மரணத்தின் விளிம்பில் இருந்த இவர்கள் தற்பொழுது காப்பாற்றப்பட்டு உள்ளார்கள்.  இந்த இயந்திரம் இதயம் மற்றும் நுரையீரலுக்கு மாற்றாக வெளியில் இருந்து நேரடியாக ரத்தத்தில் ஆக்சிஜனை செலுத்தும்.

இந்நிலையில் இவர்களின் தோலின் நிறம் கருப்பாக மாறி உள்ளது. வைரஸ் தொற்று காரணமாக இவர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் உடல் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு உள்ளதன் காரணமாக இவர்களின் தோலின் நிறம் கருமையாக மாறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கூறிய Dr.Yi:-

சுயநினைவு திரும்பிய பிறகு எனது நிலை கண்டு நானே அதிர்ந்து போனேன். பின்னர் மருத்துவமனை அளித்த அறிவுரை மற்றும் ஆலோசனை காரணமாக படிப்படியாக சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறேன் என்றார்.

ALSO READ  புதுச்சேரியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை; ஆளுநர் அறிவிப்பு !

இவர் தற்போது சீனா-ஜப்பான்  நட்பு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால் அதே நிறம் சிறுநீரக மருத்துவரான Dr.Hu-ன் உடல்நிலை தற்போது வரை மோசமாக உள்ளது. அவர் கிட்டத்தட்ட 99 நாட்களாக படுத்த படுக்கையிலேயே உள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளது அதே நேரம் அவரது மன ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவது அவருக்கு சிகிச்சை அளித்து வரும் Dr. Li Shusheng  தெரிவித்துள்ளார்.

மேலும் அவரை பரிசோதிக்க வரும் மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசுவதை அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

சிகிச்சையின் ஆரம்பத்தில் இவர்களுக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் காரணமாக இவர்களின் தோல் நிறம் மாறி உள்ளதாக தான் சந்தேகிப்பதாக லி ஷுஷெங் கூறியுள்ளார் மேலும் இவர்கள் உடல் நலம் மேம்பட்ட பிறகு தோலின் நிறம் பழைய நிலைமைக்கு மாறும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனோ வைரஸ் பாதிப்பு… தனி விமானம் அனுப்பும் அமெரிக்கா

Admin

6வது முறையாக சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற மெஸ்ஸி

Admin

உலகில் 11.08 கோடியாக உயர்ந்த கொரோனா தொற்று..!

News Editor