உலகம்

சிறு பெண்ணுக்கு ஜெர்மனி அருங்காட்சியத்தில் சிலை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்வீடன் நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கிற்கு ஜெர்மனி அருங்காட்சியத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயதான கிரேட்டா தன்பெர்க் சுற்றுச்சூழல் குறித்தும் பருவநிலை மாற்றம் குறித்தும் உலக மக்களை பெரிய அளவில் சிந்திக்க வைத்தவர். 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி பள்ளிக்குச் செல்லாமல் ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்குச் சென்ற அவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் சுற்றுச்சூழலுக்காக ஒதுக்கி போராடி வருகிறார்.

அமெரிக்காவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் காலநிலை குறித்து கேள்வி எழுப்பி உலக அரங்கில் அதிக பேசப்பட்ட நபர் கிரேட்டா தன்பெர்க் ஆவார்.இவர் டைம்ஸ் பத்திரிக்கையின் சார்பில் ‘2019ன் யூத் ஆஃப் பவர்’ என்ற சிறப்பை பெற்றார்.

ALSO READ  பிரதமர் மோடி - அதிபர் ஜோ பைடன் சந்திப்பு

இந்நிலையில் கிரேட்டா தன்பெர்க்கிற்கு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரிலுள்ள மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.ஜெர்மனியை சேர்ந்த காட் ஃபிரைட் என்ற சிற்பி இந்த சிலையை உருவாக்கி உள்ளார்.

பார்ப்பதற்கு தத்ரூபமாக கிரேட் அவை போல இருக்கும் அந்த மெழுகு சிலை கையில் வாசகத்துடன் நிற்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கூடிய விரைவில் கொரோனா தடுப்பூசி:

naveen santhakumar

தண்ணீர் மீது நடக்கும் இளைஞர்… வைரலாகும் வீடியோ..

Admin

உலகிலேயே இந்த நாட்டில் மட்டும் தான் ஒருவர் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லையாம்… எந்த நாடு தெரியுமா???

naveen santhakumar