உலகம்

பிரிட்டனின் புதிய நிதியமைச்சரானார் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரிட்டனின் புதிய நிதியமைச்சரானார் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் மாற்றங்களை செய்து வருகிறார்.

இதில் நிதியமைச்சராக இந்திய வம்சாவளி அரசியல்வாதி ரிஷி சுனக்கை அவர் புதிய நிதியமைச்சராக நியமித்துள்ளார்.

ஹாம்ப்ஷயரில் பிறந்த ரிஷி சுனக்; யார்க்‌ஷயர் ரிச்மோண்ட் MPயாக 2015-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.

தற்போது, 39 வயதாகும் ரிஷி சுனக் உள்நாட்டு அரசில் ஜூனியர் அமைச்சராக இருந்தவர். கடந்த ஆண்டு கருவூல தலைமைச் செயலராகப் பதவி உயர்வு பெற்றார்.

ALSO READ  கொரோனா அச்சத்தால் பிரிட்டன் பிரதமர் "போரிஸ் ஜான்சன்" வருகை ரத்து..!

கடந்த, டிசம்பர் 2019 தேர்தல் போரிஸ் ஜான்சன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவித் ராஜினாமா செய்தது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஏனெனில், சாஜித் ஜாவித் பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் தனது 5 ஆலோசகர்களையும் நீக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நிபந்தனை விதித்தார். ஜாவித் அந்த நிபந்தனையை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தது பிரிட்டன் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ALSO READ  இங்கிலாந்து மக்களை அச்சுறுத்திய கொலையாளியை கூட விட்டு வைக்காத அரக்கன் கொரோனா :

ரிஷி சுனக், இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதாவைத் திருமணம் செய்து கொண்டார்.

ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட்டை பெருமளவு ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2021-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

News Editor

Spirit ரோவர் செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட தினம் இன்று…

naveen santhakumar

ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி 76 வது நினைவு தினம்:

News Editor