தமிழகம்

பதவியேற்று மூன்றாண்டுகளை நிறைவு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று இன்று 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

தமிழகத்தில் 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 2வது முறையாக அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றார். ஆனால் சில மாதங்களில் அவர் உடல்நலக்குறைவால் மரணமடைய அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 16ம் தேதி பதவியேற்றார்.

கடந்த 3 ஆண்டுகளில் அவர் 34,893 கோடி ரூபாய் மதிப்பிலான 47,829 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 24,090 கோடி ரூபாய் மதிப்பிலான 7,909 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம், மத்திய அரசின் நல்லாட்சிக்கான விருதுகள் என அவர் செய்த சாதனைகள் ஏராளம்.

ALSO READ  சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்!

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம், மாமல்லபுரத்தில் நடந்த பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு ஏற்பாடுகள், ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான அனுமதி, அத்திக்கடவு அவினாசி திட்டம், பள்ளிக்கல்வித்துறையில் அமல்படுத்தப்படும் அட்டகாசமான திட்டங்கள், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை, கால்நடைகளின் சிகிச்சைக்காக ” அம்மா ஆம்புலன்ஸ் ” சேவை, ரூ.1000த்துடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள், குடிமராமத்து பணிகள், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப்பூங்கா என அவரின் ஆட்சியில் பாராட்டுகளை பெற்ற செயல்பாடுகள் ஏராளம்.

அதேசமயம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஆகிய சம்பவங்கள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தின.

ALSO READ  3 நாட்களில் 51 போலி மருத்துவர்கள் கைது?

சோதனைகள் பல வந்தாலும் சாதனைகளாக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மருத்துவக் குழுவினர் உடன் நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை..!!

naveen santhakumar

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தை…கதறியழும் மகள்… கண்ணீரை வரவழைக்கும் காட்சி….

naveen santhakumar

சுனாமி ஏற்படுமோ என்று பொதுமக்கள் பீதி….

naveen santhakumar