லைஃப் ஸ்டைல்

நம்ம சென்னைக்கு வந்தாச்சு ரிவோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் பைக்..!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

பேட்டரியில் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அடுத்து எலக்ட்ரிக் பைக்குகள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரிவோல்ட் இனாடெலிகார்ப் நிறுவனம் ரிவோல்ட் ஆர்வி400 மற்றும் 200 இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றில் ஆர்வி400 பைக் 72 வோல்ட் ஆற்றலை தரக்கூடிய 3.24 KWh லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம், மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

பைக்கை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 1/2 மணி நேரம் ஆகும்.

ALSO READ  மணப்பெண் கேட்ட ‘100 பரிசுகள்’ : வாங்கி கொடுத்து அசத்திய மாப்பிள்ளை

கூடுதல் வசதிகளாக சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், மோனோஷாக் சஸ்பென்ஷன், எக்கோ/ஸ்போர்ட்/சிட்டி என 3 வித ட்ரைவிங் மோடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பைக்குகளை பெண்களும் எளிதில் இயக்கலாம் பைக் ஓட்ட விரும்பும் பெண்களுக்கு ஒரு நல்ல ஆப்ஷன்.

ALSO READ  பெண்களே நெற்றி சுருக்கத்தால் அவதிப்படுகிறீர்களா ???????? இதோ உங்களுக்கான எளிய தீர்வு......

இந்த ரிவோல்ட் பைக்குகள் அன்லிமிடெட் வாராண்டியும் வழங்குகிறது. மேலும் பேட்டரி ஸ்வேப் செய்யும் வசதியும் வழங்குகிறது.

பேட்டரி வழியில் தீர்ந்து விட்டாலோ அல்லது பழுதடைந்துள்ள புதிய பேட்டரி ஆர்டர் செய்து மாற்றிக்கொள்ளலாம். தவிர, இந்த பேட்டரிகளை தனியே கழற்றி சார்ஜிங் செய்யவும் முடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள வேண்டுமா? இதை செய்யுங்கள்!

Admin

பெண்களின் மன நிலையை கூறும் லிப்ஸ்டிக் ஜோதிடம்…

naveen santhakumar

மகனுக்காக மரத்தில் லம்போர்கினி காரை உருவாக்கிய தந்தை…!

Shobika