உலகம்

கென்யாவில் வரிக்குதிரையுடன் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலங்கு… பெயர் என்ன தெரியுமா..???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கென்யா:-

கழுதையும், வரிக்குதிரையும் இணைப்பால் அரிய உயிரினம் ஒன்று பிறந்துள்ளது. ஒரு விலங்கினம் இன்னொரு விலங்கினத்துடன் இணைந்து புதுவித உயிரை உருவாக்குவது என்பது அரிதினும் அரிதான விஷயம். 

அப்படியொரு அரிய விஷயம் கென்யாவில் நடந்துள்ளது. அங்கு வரிக்குதிரையும் கழுதையும் இணைந்து, ‘Zonkey’ (ஜாங்கி) என்னும் புதுவித உயிரினத்திற்கு பிறப்பு கொடுத்துள்ளது. 

கென்யாவில் உள்ள ஷெல்டிரிக் வனவிலங்கு அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு இது குறித்த தகவல் வந்துள்ளது. அவர்கள் அந்தக் குட்டி ஜாங்கியின் ஃபேஸ்புக்கில் புகைப்படத்தைப் பதிவிட்டு, அதன் கதையையும் உலகிற்குப் பகிர்ந்துள்ளனர். 

“கடந்த ஆண்டு, மிகவும் ஆபத்தான பகுதியிலிருந்த ஒரு வரிக்குதிரையை நாங்கள், கிழக்கு சாவோ தேசியப் பூங்காவில் அவிழ்த்து விட்டோம். பூங்காவில் விட்டதிலிருந்து மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது அந்த வரிக்குதிரை. 

ALSO READ  யூடியூப் சேனலில் மதிப்பீடு செய்து ஆண்டுக்கு 185 கோடி சம்பாதிக்கும் சிறுவன்...

சமீபத்தில் அந்த வரிக்குதிரையைப் பார்த்தபோது, ஒரு குட்டியை உடன் வைத்திருந்தது. அதன் குட்டி என்று எங்களுக்குப் புரிந்ததே தவிர, மிகவும் அரிதான கலப்பினமான ஜாங்கி, அந்தக் குட்டி என்று எங்களுக்குத் தெரியவில்லை. சில நாட்களுக்குப் பின்னர் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டோம்.

ALSO READ  இறந்துவிட்டதாக நினைத்த நபர் பிணவறையில் எழுந்ததால் அதிர்ச்சி:

இந்த ஜாங்கி, ஆரோக்கியமாக வளர முடியும். ஆனால், அதனால் இன்னொரு குட்டியை ஈன முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகளை இயற்கை வழங்கவில்லை,” என்று ஷெல்டிரிக் வன விலங்கு அறக்கட்டளை, அந்த ஸ்பெஷல் விலங்கு பற்றிய கதையை, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார்

Admin

எனக்கு விவகாரத்து கிடைச்சிடுச்சே… பார்ட்டி வைத்து கொண்டாடிய பெண்

Admin

சர்வதேச விருது பெற்ற புகைப்படம் எது தெரியுமா???

naveen santhakumar