விளையாட்டு

ஐசிசி பெண்கள் கனவு அணியில் இடம் பிடித்த இந்திய வீராங்கனைகள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள பெண்கள் கனவு அணியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மந்தனா உட்பட 7 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த ஆண்டுக்கான சிறந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங் கனைக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் எல்சி பெர்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 441 ரன்களும், 21 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அதேபோல் 20 ஓவர் போட்டிகளில் ஆயிரம் ரன்களும், 100 விக்கெட்டுகளும் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையை இந்த ஆண்டு படைத்தார். அதனால் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இதேபோல் ஐசிசி இந்த ஆண்டுக்கான கனவு பெண்கள் அணியின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியான அணியின் கேப்டனாக தற்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்திய அணி சார்பாக மந்தனா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ் போன்ற வீராங்கனைகளும், 20 ஓவர் போட்டியில் மந்தனா, தீப்தி ஷர்மா, ராதா யாதவ் ஆகியோர் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.


Share
ALSO READ  மைதானத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு.....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரூ.4 கோடிக்கு ஏலம் போன ஷேன் வார்ன் தொப்பி

Admin

இவரை தோற்கடிப்பது கடினம்: விராட் கோலி பகிர்ந்த ரகசியம்

Admin

நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வருவது எப்படி??… 

naveen santhakumar