உலகம்

ஊரடங்கு காரணமாக 2,000 கிலோ மீட்டர் பயணம் செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊரடங்கு காரணமாக ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து இயங்காததால், பதவி ஏற்க இரு நீதிபதிகள்  கார் மூலமாக 2 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 18-ம் தேதி பம்பாய், மேகாலயா, ஒடிசா உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம்,  நியமித்தது. 

இதன்படி பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக, கோல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி திப்னாகர் தத்தா, மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக, பிஸ்வநாத் சோமாதர், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதியாக, முகமது ரபீக் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

ALSO READ  சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இன்று பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

இந்நிலையில் பதவியேற்பதற்காக பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ள திப்னாகர் தத்தா, மேகாலயா நீதிபதியாக பதவியேற்க உள்ள பிஸ்வநாத் சோமாதர் ஆகியோர் , கார் மூலமாக சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணாம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  மீண்டும் ஊரடங்கா?… முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

நீதிபதி திப்னாகர் தத்தா தனது மகனுடன் கொல்கத்தாவில் இருந்து காரில் பயணம் செய்து மும்பை சென்றடைந்தார். அதேபோல நீதிபதி பிஸ்வநாத் சோமாதர் தனது மனைவியுடன் கொல்கத்தாவிலிருந்து ஷில்லாங் சென்றடைந்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

23 நாட்கள் பாலியல் வன்கொடுமை.. மனித கழிவுகளை உண்ண வைத்து கொடூரம்.‌….

naveen santhakumar

ஆப்பிரிக்கவை தடுப்பூசி மருந்துகளை பரிசோதனை செய்யும் கூடமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆவேசம்….

naveen santhakumar

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

News Editor