உலகம்

உயிரை காப்பாற்றிய மருத்துவர்களின் பெயரை தனது குழந்தைக்கு வைத்த பிரதமர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


லண்டன்:-

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி ஸைமண்ட்ஸ் (Carrie Symonds) தங்களது மகனின் பெயரை முதன் முறையாக அறிவித்துள்ளனர்.

பிறந்த குழந்தைக்கு வில்ஃப்ரெட் லாரி நிக்கோலஸ் ஜான்சன் (Wilfred Lawrie Nicholas Johnson)  என்று பெயரிட்டுள்ளனர். அதற்கான காரணத்தையும் கிரிஸ் எவன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ  மனித எலும்புகளால் கட்டப்பட்ட சுவர்: அதிர்ச்சியில் மக்கள்

இதில் Wilfred போரிஸ் ஜான்சனின் தாத்தாவின் பெயராகும், Lawrie கேரி ஸைமண்ட்ஸின் தாத்தா பெயர்,

Nicholas என்ற பெயர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போரிஸ் ஜான்சன் என் உயிரை காப்பாற்றிய Dr Nick Price மற்றும் Dr Nick Hart  மருத்துவர்களின் நினைவாக தங்களது மகனுக்கு பெயர் சூட்டியதாக கேரி ஸைமண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

ALSO READ  அமெரிக்காவின் செனட்சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாமுக்கு மீண்டும் கொரோனா :

அதோடு NHS மகப்பேறு பிரிவில் உள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஆகியோருக்கும் தனது நன்றியை மீண்டும் தெரிவித்துள்ளார் கேரி.

கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது காதலி கேரி சைமன்ட்ஸ் இருவரும் நிச்சயதார்த்தம் கொண்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காபூல் விமான நிலையம் அருகே மீண்டும் இரட்டை குண்டு வெடிப்பு: ஏராளமானோர் உயிரிழப்பு?

naveen santhakumar

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்..

Shanthi

தலிபான்கள் என்னை கொன்று விடுவார்கள் – அதிபர் அஷ்ரப் கனி…!

naveen santhakumar