இந்தியா

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் டிசம்பர் 2022க்குள் குடிநீர் வசதி- ஹரியானா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சண்டிகர்:-

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் குடிநீர்வசதியை ஹரியானா மாநிலம் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது. 

இம்மாநிலம், ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் கீழ், 2019- 20ஆம் ஆண்டில்1.05 இலட்சம் குழாய்த் தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 100 சதவீதத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பது என்பதை 2022 டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விட மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்பதே தேசிய இலக்காகும். இந்த இலக்குக்கு முன்னதாகவே, டிசம்பர் 2022 லேயே 100 சதவீதம் தொடர்பு அளித்துவிட மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

ALSO READ  Compañía De Apuestas Deportivas On-line 1xbet ᐉ 1xbet Co

ஹரியானாவில் 28.94 இலட்சம் வீடுகள் உள்ளன, இதில் 18.83 இலட்சம் வீடுகளுக்கும், குடிநீர்குழாய்த் வசதி (Functional Household Tap Connection – FHTC), ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும், மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள 10.11 இலட்சம் இல்லங்களில், ஏழு இலட்சம் இல்லங்களுக்கு  2020- 21ஆம் ஆண்டிலேயே குடிநீர்க் குழாய்த் தொடர்பு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க ஹரியானா திட்டமிட்டுள்ளது.

இதேபோல டிசம்பர் 2022க்குள் ஜம்மு & காஷ்மீரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி செய்து தர ஜல் சக்தி  அமைச்சகம் கூறி உள்ளது.

ALSO READ  ஜம்மு-காஷ்மீரில் ஜி20 மாநாடு - என்.ஐ.ஏ. அதிரடி சோதனை..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவிற்கு ஆபத்து; ஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட 3,000 கிலோ போதைப்பொருள்…!

News Editor

புதுச்சேரியில் வரும் ஞாயிறு முகூர்த்த நாள் என்பதால் முழு ஊரடங்கு கிடையாது… 

naveen santhakumar

இந்தியாவில் மேலும் 7 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் !

News Editor