இந்தியா

இந்தியாவில் மேலும் 7 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் பாதித்துள்ளது. 24 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியாவில் உருமாறிய வைரஸ்  பரவியது. தமிழகத்தில் கூட ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த பல நாட்களாக இந்தியாவில் யாருக்கும் உருமாறிய வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கும், பிரேசிலில் இருந்த வந்த ஒருவருக்கும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 187 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Share
ALSO READ  செய்தித்தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா???
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சேவை கட்டணத்தை உயர்த்தும் BSNL நிறுவனம்

Admin

உ.பி.-ல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தர ஆணையம் – யோகி ஆதித்யநாத்… 

naveen santhakumar

இனி வீடு தேடி வரும் மது- மதுப் பிரியர்களுக்கு நற்செய்தி..! 

naveen santhakumar