இந்தியா

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் டிசம்பர் 2022க்குள் குடிநீர் வசதி- ஹரியானா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சண்டிகர்:-

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் குடிநீர்வசதியை ஹரியானா மாநிலம் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது. 

இம்மாநிலம், ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் கீழ், 2019- 20ஆம் ஆண்டில்1.05 இலட்சம் குழாய்த் தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 100 சதவீதத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பது என்பதை 2022 டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விட மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்பதே தேசிய இலக்காகும். இந்த இலக்குக்கு முன்னதாகவே, டிசம்பர் 2022 லேயே 100 சதவீதம் தொடர்பு அளித்துவிட மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

ALSO READ  பாகிஸ்தானை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்…

ஹரியானாவில் 28.94 இலட்சம் வீடுகள் உள்ளன, இதில் 18.83 இலட்சம் வீடுகளுக்கும், குடிநீர்குழாய்த் வசதி (Functional Household Tap Connection – FHTC), ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும், மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள 10.11 இலட்சம் இல்லங்களில், ஏழு இலட்சம் இல்லங்களுக்கு  2020- 21ஆம் ஆண்டிலேயே குடிநீர்க் குழாய்த் தொடர்பு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க ஹரியானா திட்டமிட்டுள்ளது.

இதேபோல டிசம்பர் 2022க்குள் ஜம்மு & காஷ்மீரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி செய்து தர ஜல் சக்தி  அமைச்சகம் கூறி உள்ளது.

ALSO READ  சலூன் கடைகள் அடைத்து போராட்டம்:


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடையாள அட்டையில் நாய் புகைப்படம்..அதிர்ச்சி அடைந்த வாக்காளர்

News Editor

ராகுலிடம் நான் தவறாக மொழிபெயர்க்கவில்லை-முதல்வர் நாராயணசாமி விளக்கம்

naveen santhakumar

இனி பசுக்களுக்கும் வரன் பார்க்கலாம்- மேட்ரிமோனி இணையதளம் தொடக்கம்

Admin