இந்தியா

இந்திய நாட்டின் பெயரை மாற்றக்கோரி வழக்கு- விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

இந்திய நாட்டின் பெயரை  பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் டெல்லியை சேர்ந்த நமா ( Namah) என்பவர், இதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் அவர், நாட்டின் பெயரான இந்தியா என்பது ஆங்கில வார்த்தை எனவும், இது காலனியாதிக்கத்தை நினைவுபடுத்துகிறது எனவும் கூறியுள்ளார்.

ALSO READ  திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியீடு..

ஆதலால் காலனியாதிக்க நினைவிலிருந்து மக்களை வெளிவருவதை உறுதி செய்ய அந்த பெயரை பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என மாற்ற வேண்டும், இதற்காக  அரசியலமைப்புச் சட்டத்தின் 1ஆவது பிரிவில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட கோரியுள்ளார். மேலும் வழக்கைத் தொடர்ந்த நமா ஆர்டிகிள் 21ன் படி இந்நாட்டின் குடிமகன் நாட்டை ‘பாரத்’ என்று அழைப்பதற்கு சம உரிமை பெற்றுள்ளான் என்பதை மேற்கோள்காட்டியுள்ளார். இதை பரிசீலித்த உச்சநீதிமன்றம், வரும் ஜூன் மாதம் 2ம் தேதி விசாரணை நடத்த வழக்கை பட்டியலிட்டுள்ளது. 

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி SA போட்டே AS போபண்ணா மற்றும் ஹ்ரிஷிகேஷ் ராய் அடங்கிய பெஞ்ச் விசாரிக்க உள்ளது. 

ALSO READ  ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்து பாஜக விமர்சனம்?

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கூகுள் பே மூலம் காணிக்கை – சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு

naveen santhakumar

தொழிலதிபர் சென்னை விமான நிலையத்தில் கைது?

Shanthi

மைதானத்தில் அம்பானி, அதானி பெயர் ; சர்ச்சையை கிளப்பிய டெஸ்ட் போட்டி..!

News Editor