தமிழகம்

ரேஷன் அரிசி புகார்…! இதோ வந்துட்டேன் என பைக்கில் சென்று “முதல்வன்” பட பாணியில் நடவடிக்கை செல்லூர் ராஜூ..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:-

தமிழகத்தைத் தாண்டி சீனா வரை பிரபலமானவர் அமைச்சர் செல்லூர் ராஜு. தற்பொழுது முதல்வன் பட பாணியில் ரேஷன்கடை சம்பந்தமான புகார் ஒன்றில் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

மதுரையில் தரமற்ற அரிசி அளிப்பதாக பெண் புகார் அளித்ததையடுத்து உடனடியாக பைக்கில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சினிமா பாணியில் அதிரடி காட்டியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

மதுரையில் பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, அங்குள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அப்போது அங்கு தன் கணவர் பிச்சை என்பவருடன் வந்த கார்த்திகை செல்வி என்ற பெண் ரேஷன் கடையில் தரமற்ற அரிசியை கொடுப்பதாகவும், 20 கிலோவுக்கு பதில் வெறும் 9 கிலோ தரமற்ற அரிசியை கொடுப்பதாகவும் அமைச்சரிடம் புகார் செய்தார்.

உடனடியாக தனது ஆதரவாளர் ஒருவரின் பைக்கில் ஏறி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாண்டியராஜபுரம் அங்காடிக்கு விரைந்த செல்லூர் ராஜூ. அங்கு ஆய்வுகளை மேற்கொண்டார். 

ALSO READ  "ஒன்றிய அரசு" தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

அதில் ரேஷன் கடை விற்பனையாளர் தரமற்ற அரிசியை, அதுவும் எடை குறைத்து கொடுத்து ஊழலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் கடையில் இருந்த பெரியசாமி என்பவரை கைது செய்யவும், விற்பனையாளர் தர்மேந்திரனை பணி நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ  மதுரையில் விதிமீறல் அபராதம் என்று பகல் கொள்ளை:

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிழவியது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆத்தூரில் காவல் ஆய்வாளர் உள்பட 117 பேருக்கு கொரோனா தொற்று !

News Editor

இன்று மறைமுக தேர்தல்: மாவட்டங்கள்,ஒன்றியங்கள் யாருக்கு?

Admin

சேலத்தில் வெறிச்சோடிய வீதிகள்; புதிய கட்டுப்பாடுகள் அமல் !

News Editor