உலகம்

தலைகீழானது அமெரிக்கா… ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு மங்கோலியா தலா ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலான்பாடர் (Ulaanbaatar):-

மனிதநேய அடிப்படையில் கொரோனா வைரஸால் உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக திகழும் அமெரிக்காவிற்கு ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதற்கு மங்கோலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலும், அமெரிக்காவில் கொரோனா வைரஸூக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு உடைகள் பிற பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றிக்கொண்டு ஜூன் 21-ஆம் தேதி சாட்டர் விமானமொன்று அமெரிக்காவிற்கு செல்கிறது.

ALSO READ  கொரோனா வைரஸால் சீனாவில் உருவாகியுள்ள புது பிரச்சனை....

அதே விமானத்தில் சியாட்டல் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் சிக்கித் தவிக்கும் மங்கோலிய மக்களை ஏற்றுக் கொண்டு திரும்பவும் மங்கோலியாவில் செல்கிறது.

முன்னதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ரஷ்யாவிற்கு ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதாக மங்கோலியா உறுதி அளித்திருந்தது. மங்கோலியா ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள நாடாகும். இதேபோல 30,000 செம்மறி ஆடுகளை சீனாவிற்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  பாகிஸ்தான் முன்னால் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானிக்கு கொரோனா... 

உலகில் பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவி அளித்து வந்த அமெரிக்காவிற்கு  பொருளாதாரத்தில் மிகச் சிறிய நாடான மங்கோலியா தற்போது நிதி உதவி அளித்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொரோனா பரவும் காலகட்டத்தில் கூட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் புழுதி புயல்…வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து….

Shobika

ஜி20 மாநாட்டை புறக்கணித்து கோல்ஃப் விளையாட சென்ற டிரம்ப்:

naveen santhakumar

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் :

Shobika