உலகம்

தலைகீழானது அமெரிக்கா… ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு மங்கோலியா தலா ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலான்பாடர் (Ulaanbaatar):-

மனிதநேய அடிப்படையில் கொரோனா வைரஸால் உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக திகழும் அமெரிக்காவிற்கு ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதற்கு மங்கோலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலும், அமெரிக்காவில் கொரோனா வைரஸூக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு உடைகள் பிற பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றிக்கொண்டு ஜூன் 21-ஆம் தேதி சாட்டர் விமானமொன்று அமெரிக்காவிற்கு செல்கிறது.

ALSO READ  சிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி…

அதே விமானத்தில் சியாட்டல் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் சிக்கித் தவிக்கும் மங்கோலிய மக்களை ஏற்றுக் கொண்டு திரும்பவும் மங்கோலியாவில் செல்கிறது.

முன்னதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ரஷ்யாவிற்கு ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதாக மங்கோலியா உறுதி அளித்திருந்தது. மங்கோலியா ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள நாடாகும். இதேபோல 30,000 செம்மறி ஆடுகளை சீனாவிற்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு

உலகில் பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவி அளித்து வந்த அமெரிக்காவிற்கு  பொருளாதாரத்தில் மிகச் சிறிய நாடான மங்கோலியா தற்போது நிதி உதவி அளித்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொரோனா பரவும் காலகட்டத்தில் கூட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சமூக விலகலை கடைபிடிக்க பிரத்தியேக ஷூ ரெடி…

naveen santhakumar

பிடனுக்கு சுளுக்கு….குணமடைய வாழ்த்து தெரிவித்த டிரம்ப்:

naveen santhakumar

கட்டுக்கடங்காத தொற்று; மீண்டும் முழு ஊரடங்கு – அரசு முடிவு?

naveen santhakumar