சினிமா

அவருடன் நடிக்க கொஞ்சம் பயமா இருக்கு : படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு குஷ்பு ட்விட்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஏ .ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் படம் 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசையில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் post production வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ALSO READ  பாலிவுட் செல்லும் தல அஜித்தின் வேதாளம் படம்.

மேலும்,தலைவரின் 168 வது படத்தின் அறிவிப்புகளும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாக நடிக்க உள்ளனர்.மேலும் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க உள்ளார் என கூறப்படுகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற குஷ்பூ, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தலைவர் 168 படத்தில் நடிப்பது பயமாகவும், பதட்டமாகவும் இருக்கிறது. என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே’ என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த பலரும் குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் படம் பற்றிய புதுப்புது அப்டேட்களும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பவுன்ராஜின் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் !

News Editor

யூடியூபில் சாதனை படைத்த ’ரெளடி பேபி’

naveen santhakumar

தனது உடல் செய்கைகளால் மிரட்டிய காவல் ஆய்வாளர்……தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி :

naveen santhakumar