உலகம்

உலகின் காஸ்ட்லியான இவியான் குடிநீரைக் கொண்டு தனது மாளிகையில் நிரப்பிய கோடீஸ்வர ஷேக்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:-

ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் லண்டனில் உள்ள தனது மாளிகையில் 60 மில்லியன் பவுண்ட் மதிப்புடைய பெர்க்ஷயர் (Berkshire) மாளிகையின் தண்ணீர் தொட்டியில் உலகின் மிகவும் விலை உயர்ந்த ஈவியன் குடிநீரை நிரப்பிய தகவல் தெரியவந்துள்ளது.

அமீரக கோடீஸ்வரர்களில் ஒருவரும் ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியுமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (71) (Sheikh Khalifa bin Zayed al-Nahyan) வின்ஸ்டார் பூங்கா (Windsor Great Park) அருகே அஸ்காட்  தண்ணீர் தொட்டியில் இவருக்கு சொந்தமான அஸ்காட் மாளிகை (Ascot Palace) உள்ளது.

ALSO READ  கென்யாவில் வரிக்குதிரையுடன் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலங்கு... பெயர் என்ன தெரியுமா..???

இந்த மாளிகையில் உயர் ரக ஈவியன் குடிநீரை நிரப்பி உள்ளார். இதற்காக ஈவியன் குடிநீர் பாட்டில்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து கப்பல் மூலம் வரவழைத்துள்ளார். ஈவியன் குடிநீர் லிட்டருக்கு 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ஷேக் கலிஃபா, லண்டனில் உள்ள அந்த 18 ஆம் நூற்றாண்டு மாளிகையில் ஆண்டுக்கு எப்போதாவது ஒரு சில நாட்கள் மட்டுமே தங்கிச் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.

லண்டனில் இவருக்கு சுமார் 5.5 பில்லியன் பவுண்ட்கள் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவரது ஒன்றுவிட்ட ஒரு சகோதரர் (Half-Brother) மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  ராக்கெட்டில் பயணிக்கும் வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்கும் ஸ்பேஸ் எக்ஸ் சோதனை வெற்றி

இதை தவிர ஷேக் கலீஃபா மற்றும் அவரது குடும்பத்தினர் எவரும் 17 ஆண்டுகளாக வருகை தராத, ஸ்பெனில் மாட்ரிட்டுக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு மாளிகையின் பாதுகாப்புக்குகாக 15 நிரந்தர ஊழியர்களுக்காக ஆண்டுக்கு ரூ.4.15கோடிக்கும் அதிகமாக செலவிட்டார் என்பது தெரியவந்துள்ளது.

ஷேக் கலிஃபாவின் தந்தை ஷேக் சயத் பின் சுல்தான் அல் நஹ்யான் (Sheikh Zayed bin Sultan Al Nahyan) ஐக்கிய அமீரகத்தை நிறுவியவர். 2004-ல் அவரது மறைவுக்கு பின்னர் ஷேக் கலிஃபா ஜனாதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

News Editor

கொரோனோ வைரஸ் பரவ இதுதான் காரணமா?

Admin

பொங்கல் விழாவை முன்னிட்டு கனடா பிரதமர் வாழ்த்து

Admin