உலகம்

பிரபல ஆபாச பட நடிகர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லாஸ்ஏஞ்சல்ஸ்:-

பிரபல ஆபாச பட நடிகர் ரோன் ஜெர்மை (Ron Jeremy). இவர் மீது 4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

67 வயதாகும் ரோன் ஜெர்மை ஆபாச பட உலகில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவரது முழுப்பெயர் ரொனால்ட் ஜெர்மை ஹயாட் (Ronald Jeremy Hyatt).

இவர் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டிற்குள்ளான கால கட்டத்தில் 4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 25 வயதான பெண் ஒருவரை மேற்கு ஹாலிவுட்டில் உள்ள தனது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை (Oral copulation and Sexual battery) செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு 33 மற்றும் 46 வயதுடைய இரு பெண்களையும், 2019ம் ஆண்டு 30 வயதுடைய பெண்ணையும் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ALSO READ  கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு:

தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 90 ஆண்டுகள் வரை அவருக்கு தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே தன் மீது கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள ரோன், தான் நிரபராதி என்றும், தான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க என்னால் காத்திருக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும், தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ  ரஷ்ய இயக்குனரால் விண்வெளியில் படமாக்கப்பட்ட 'தி சேலஞ்ச்' ஆவணப்படம்

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவில் பன்றிகளிடையே பரவும் புது காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கும்- ஆய்வாளர்கள் எச்சரிக்கை… 

naveen santhakumar

இங்கிலாந்து நாட்டில் இந்தியர்களுக்கு பயண கட்டுப்பாடு தளர்வு :

Shobika

இ சிகரெட்டுக்கு தடை விதித்த அமெரிக்க அரசு

Admin