தமிழகம்

கடுமையான தண்டனை தேவை- வீர விளையாட்டு மீட்பு கழக மாநில தலைவர் ராஜேஷ் அறிக்கை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி:-

சாத்தான்குளம் சிறை மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீர விளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் T.ராஜேஷ் வலியுறுத்தியுள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரும் காவலர்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

ALSO READ  தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டமானின் பிறந்தநாள்!!!

இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் ன, முத்துராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதரையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

From Left SI Balakrishnan, SI Raghu Ganesh, Ins. Sridhar.

இதனிடைடைய இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு வீரவிளையாட்டு மீட்பு கழகத் தலைவர் T.ராஜேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்:-

ALSO READ  வண்டலூர் பூங்காவுக்கு இம்மாதம் விடுமுறை இல்லை!

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களின் கைது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக அமைந்து விடாமல், அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நகைக்கடன் முறைகேடு: திருப்பி வசூலிக்க உத்தரவு..!

Admin

இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் :

Shobika

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் நாளை ஆலோசனை :

Shobika