தமிழகம்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வீட்டில் மனைவி, மகன் உட்பட நான்கு பேருக்கு கொரோனா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் அவரது மாமனார், மாமியார் என நான்கு பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கொரோனா நோய் தடுப்பு பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியானது.

இது தொடர்பாக பதிலளித்த ராதாகிருஷ்ணன்:-

ALSO READ  டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு..

என் மனைவி, மகன், மாமனார், மாமியார் உள்ளிட்ட நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு கிங்ஸ் (அரசு) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பரிசோதனை செய்ததில், எனக்கு தொற்று இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும்,நான் வெளிப்படையான நபர், இதில் மறைக்க எதுவும் இல்லை. எனக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதாக வரும் செய்திகள் வதந்தி. நான் நலமாக உள்ளேன் என்றும் அவர் விளக்கமளித்தார்.

ALSO READ  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்; தமிழக அரசு !

தமிழகத்தில் 4 அமைச்சர் உட்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவை கலெக்டர் ராசாமணி, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா உட்பட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட அரசு அதிகாரிகள் பலருக்கும் தினமும் தொற்று உறுதியாகி கொண்டிருக்கிறது. இதில் கோவை கலெக்டர் ராசாமணி தற்பொழுது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று….

naveen santhakumar

10 ரூபாய் கட்டணத்தில் சென்னையை சுற்றி பார்க்க சுற்றுலாத் துறை அறிவிப்பு

Admin

1ம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசம் !

naveen santhakumar