தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வருகிற 9ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அணைகளில் நீர் இருப்பை பொறுத்து சில நேரங்களில் காலதாமதாகவும் திறக்கப்படும். மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதன் மூலம், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் நடப்பு ஆண்டில் 100 அடிக்கு மேல் நீடித்து வந்ததால் வழக்கம் போல் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டு விடும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்த நிலையில் விவசாயிகள் எதிர்பார்த்தபடி ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து வைக்க உள்ளதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
ALSO READ  9 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் உதவித்தொகையை பிரதமர் மோடி வழங்குகிறார்:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பயிற்சி பெற்ற இரண்டு மோப்ப நாய்கள்…

Admin

தொண்டர்களே எனது கடவுள்: உருக்கமாக பேசிய விஜயகாந்த்

Admin

தமிழ்நாட்டில் பிச்சையெடுக்கும் வெளிநாட்டு தொழிலதிபர்…

Admin