விளையாட்டு

2 ஆண்டுகளாக சரியாக களமிறங்கவில்லை- ஆனாலும் முதலிடம் பிடித்த அஸ்வின்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 10 ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதேபோல் கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சுழற்பந்து வீச்சில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் அறிமுகமான அஸ்வின் 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முதலாக அறிமுகமானார். இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களின் ஒருவராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஐபிஎல் போட்டியின்போது மன்கட் முறையில் ராஜஸ்தான் அணி வீரர் பட்லரை அவுட் செய்து பெரும் சர்ச்சைக்குள்ளானார்.

ALSO READ  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் !

கடந்த பத்தாண்டுகளில் அஸ்வின் 564 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் இந்திய அணியில் ஓரம் கட்டப்பட்டார். பெரும்பாலான தொடர்களில் அவர் சேர்க்கப்படவில்லை. இருந்தாலும் முதலிடம் பிடித்தது ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கிடைத்துவிட்டார் அடுத்த யுவராஜ் சிங்……முன்னாள் இந்திய அணியின் வீரர் புகழாரம்……யார் அவர்?????

naveen santhakumar

விடுமுறையை கொண்டாட ஸ்விட்சர்லாந்து சென்ற கோலி – அனுஷ்கா தம்பதியினர்

Admin

மிரட்டியெடுத்த ஆஸ்திரேலியா: படுதோல்வியை சந்தித்த இந்தியா

Admin