இந்தியா

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரக்கோரி…… திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் நிர்மலா சீதாராமனிடம் வேண்டுகோள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருப்பதி: 

ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தா்கள் செலுத்திய பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மாற்றித் தர வேண்டும், என்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி, மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்தாா்.

தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது தேவஸ்தானத்தின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு (எஸ்டிஎஃப்) தொடா்பாக கடந்த 2014, ஏப்ரல் 1 முதல் நடப்பு ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி வரித்தொகையான ரூ.23.78 கோடியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்தாா். 

ALSO READ  ஆற்றில் கவிழ்ந்த ராணுவ பேருந்து.. 6 வீரர்கள் பலி..

அவ்வாறு ரத்து செய்தால், அத்தொகையை தேவஸ்தானம் நடத்தி வருகின்ற பல கல்வி மற்றும் தா்ம காரியங்களுக்கு பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்று அவா் சுட்டிக் காட்டினாா்.நாட்டில் முன்பு புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பா் 8ஆம் தேதி மதிப்பிழப்பு செய்தது. 

அவ்வாறு பணமதிப்பிழப்பு செய்த ரூபாய் நோட்டுகளை ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தா்கள் பலரும் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். இந்த நோட்டுகளை மாற்றி புதிய ரூபாய் நோட்டுகளை அளிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் பலமுறை மத்திய ரிசா்வ் வங்கியிடமும், மத்திய அரசிடமும் முறையிட்டது.

ALSO READ  ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது …!

தற்போது தேவஸ்தானத்திடம் பணமதிப்பிழப்பு செய்த ரூ.500 நோட்டுகள் ரூ.6.38 லட்சம் அளவுக்கும், ரூ.1000 நோட்டுகள் ரூ1.8 லட்சம் அளவுக்கும் உள்ளன. அவற்றை மத்திய ரிசா்வ் வங்கி மாற்றி அளிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்தால், இத்தொகையையும் தேவஸ்தானம் தா்ம காரியங்களுக்கு செலவிட வசதியாக இருக்கும் என்று சுப்பா ரெட்டி, மத்திய நிதி அமைச்சரிடம் தெரிவித்தாா்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்…. 

naveen santhakumar

6 ஆயிரம் ரூபாயில் வெண்டிலேட்டர்..ஒடிசா தொழிலதிபர் தயாரிப்பு…..

naveen santhakumar

NEET முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு- தமிழத்திலிருந்து இம்முறை அதிகளவு மாணவர்கள் தேர்வு

Admin