அரசியல்

கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் நடிகர் விஜய்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் பாஜகவில் இணையப்போகிறோம் என்ற கருத்துக்கே இடமில்லை என்றும், தனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது, அதுதான் விஜய் மக்கள் இயக்கம் என்றும் தெரிவித்தார். மேலும் தேவைப்போடும்போது அதனை அரசியல் கட்சியாக மாற்றுவோம் மக்கள் அழைக்கும் போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும், எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தன்னுடைய பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். அப்போது அரசியலில் நுழைவதற்கான ஆலோசனை நடைபெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.தொடர்ந்து அரசியலுக்கு வரும்படி, நடிகர் விஜய்க்கு ஆதரவாக ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டினர். ஆனால் தேவையற்ற போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியிருந்தார்.

ALSO READ  அரசியலில் குதிக்க போகும் பிரபல நடிகை?

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறியுள்ளது. கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்தார். கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி: ஈஸ்வரன் பேட்டி !

News Editor

பெயர் அரசியலால் நீர்த்து போகிறது -அன்புமணி கேள்விக்கு நடிகர் சூர்யா பதில்

naveen santhakumar

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.

naveen santhakumar