வணிகம்

இந்தியா பொருளாதாரம் சில சவால்களை கண்டு வருவது உண்மைதான்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் இது வரவிருக்கும் ஆண்டுகளில் வளர்ச்சி இதே போல் குறையும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்திய பொருளாதார சங்கத்தின் 102-வது ஆண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி வீழ்ச்சியால் இந்திய பொருளாதாரம் சில சவால்களை மேற்கொண்டுள்ளது. பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ALSO READ  வங்கிகளில் NEFT,RTGS,IMPS.. என்ன வித்தியாசம் தெரியுமா?
பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்

கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் சில சீர்த்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் திவால்நிலை,ஜிஎஸ்டி விகிதங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் வரவிருக்கும் காலங்களில் வளர்ச்சிக்கு உதவும். ஜிஎஸ்டி ஆட்சியின் கீழ் 66 லட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் வங்கித்துறையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வாராக்கடன் சிக்கலை சமாளிகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆறுதல் தரும் விஷயம்

இந்த நிலையில் 2022க்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது நமது தேசிய தீர்மானமாகும். நாயுடு ஒரு நிலையான மற்றும் ஊதியம் தரும் கிராமப்புற பொருளாதாரத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி வாங்கவே முடியாதோ?… இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

naveen santhakumar

இந்த ஆப்பிள் ஒரு வருடத்திற்கு கெட்டு போகாதாம்…!

Admin

2,500 CC திறன் கொண்ட புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்

Admin