அரசியல்

ஜனவரி-5 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் தி.மு.க.தலைவர் ஸ்டாலின்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

தி.மு.க.தலைவர் ஸ்டாலின், ஜனவரி-5-ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக அக்கட்சியின் முதன்மை செயலர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் அவர்,”2021 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ‛விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் ஜனவரி-5ல் தி.மு.க.தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தை துவங்குகிறார்.15 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து 1,500 கூட்டங்கள் நடத்தி 500 உள்ளூர் நிகழ்ச்சிகளை நடத்தும் அவர், சுமார் 10 லட்சம் மக்களை சந்திக்கும் வகையில் இந்த பயணம் அமையும். 

ALSO READ  அலட்சியம் காட்டாதீர்கள்… மத்திய அரசிடம் மன்றாடும் கே.எஸ்.அழகிரி!

இந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க., அரசு என்னென்ன செய்ய தவறியிருக்கிறது????.என்ன காரியங்களை தவறாக செய்திருக்கிறார்கள்????, தி.மு.க. கட்சியில் என்னென்ன திட்டங்கள், எப்படி செயல்படுத்தப்படும்??? என்பதை இந்த பயணங்களில் எடுத்து செல்வோம். பா.ஜ.க அரசின் திட்டங்களுக்கு அனுமதி தந்து மாநில உரிமைகளை விட்டு கொடுத்து சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட இந்த ஆட்சியை கலைக்கும் விதத்தில் இந்த பயணம் நடக்கும். 

இந்த பிரச்சாரம் 75 நாட்கள் நடக்கும்.இதில் 15 தலைவர்கள் பங்கேற்பார்கள்.முதலாவதாக திருக்குவளையில் தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி பிரச்சாரத்தை தொடங்குகிறார். 29ம் தேதியில் இருந்து கனிமொழி பிரச்சாரத்தை தொடங்குகிறார்” என்று அவர் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திமுக தான் பாஜகவின் B-டீம்; பழ.கருப்பையா குற்றசாட்டு !

News Editor

பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் மீது ராகுல் காந்தி தொடர் அட்டாக் டாக்

Admin

மத கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடத்தப்பட்டது; அண்ணாமலை குற்றச்சாட்டு !

News Editor