தமிழகம்

நம்மை காக்க அரும்பாடு படும் ராணுவ வீரர்களுக்கு நாம் தாராளமாக நிதியளிக்கலாம்-முதல்வர்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நமது தாய் திருநாட்டின் இறையாண்மையினை காத்திடும் உயரிய சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ள முப்படை வீரர்களின் மாபெரும் தியாக உணர்வுக்கு நாம் நன்றிக் கடன் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் நாளை படைவீரர் கொடி நாளாக அனுசரித்து வருகிறோம்.படைவீரர்களது தியாகத்தையும், சேவையையும் நாம் மனதார போற்றுகின்ற அதே வேளையில், அவர்களுக்கு வேண்டிய  எல்லா உதவிகளையும் செய்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ALSO READ  விஜயகாந்த் படத்தை இயக்கிய இயக்குநர் ஏவிஎம் அருகே இறந்து கிடந்த சோகம்....

அரும்பாடுபட்டு பெற்ற விடுதலையை காப்பாற்றும் பெரும் பணியில் ஈடுபட்ட முப்படை வீரர்களின் குடும்பத்தாரின் நலனைக் காப்பதில் தமிழ்நாடு என்றென்றும் முன்னணியில் திகழ்கின்ற தனிப் பெருஞ்சிறப்பைப் பெற்றுள்ளது.ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, முப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் நலன்களை காத்திடவும், போரில் உயிரிழந்த  படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை மற்றும் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. 2011 முதல் 2020 வரை 3,387 முன்னாள் படை வீரர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு பணியிடங்களில் பணியமர்த்தம் செய்துள்ளது. 

இந்த இனிய நாளில், முப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நமது முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவையை போற்றும் வகையிலும், நம் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையிலும், கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியினை வழங்கிட வேண்டுமென அனைவரையும் நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.என்று அவர் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம் !

News Editor

கொரோனா பரவல்: சென்னை,கோவை, மதுரை உட்பட 5 மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு அமல் – தமிழக அரசு…..

naveen santhakumar

துப்பாக்கியை பயன்படுத்த போலீசார் தயங்கக்கூடாது – டி.ஜி.பி.சைலேந்திர பாபு

naveen santhakumar