இந்தியா

குருவாயூர் கோவில் பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்: 

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயில் பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் என 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு பக்தர்கள்,சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.கோயிலை சுற்றியுள்ள பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக, திரிச்சூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கேரளாவில் உள்ள சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள், தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், சபரிமலை மற்றும் குருவாயூர் கோயில்களில் ஊழியர்களுக்கு தொற்று பரவுவது தெரியவந்துள்ளது.

ALSO READ  உணவுத்துறை அமைச்சர் காமராஜிற்கு கொரோனா :

இந்நிலையில், குருவாயூர் கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் என 46 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து குருவாயூர் கோயில் உள்ள பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு, அனுமதி வழங்கப்படாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தந்தையை 1200 கிமீ தூரம் சைக்கிளில் வைத்து அழைத்துச்சென்ற 15 வயது பீகார் சிறுமிக்கு அடித்த அதிர்ஷடம்.. 

naveen santhakumar

குழந்தைகளின் பொழுதுபோக்கோடு கற்றல் மற்றும் படைப்புத்திறனுக்கும் முன்னுரிமை – பிரதமர் மோடி

News Editor

குடியரசு தலைவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் !

News Editor