சினிமா

“அசுரன்” கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய அரசின் திரைப்படத்துறை (IFFI) சார்பில் வருடம்தோறும் நடத்தப்படும் ’கோவா சர்வதேச திரைப்பட விழா’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை நடக்கவிருந்த நிலையில் கொரோனா சூழலில் உலக நாடுகளின் இயக்குநர்கள், நடிகர்கள் என்று பலரும் வருவதற்கு சிக்கல் எழும் என்பதால் கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16 ஆம் தேதிமுதல் 24 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவித்தார்கள்.  

ALSO READ  ஷாருக்கான்-அட்லீ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு !

அதனை தொடர்ந்து  இதில் ஆரம்பம் மற்றும் இறுதி நிகழ்வு  குறைந்தளவு பார்வையாளர்களுடன் நடத்தப்படும். இத்திரைப்பட விழாவை மக்கள் ஆன்லைன் மூலம் பார்க்கலாம். என்று கூறியிருந்தது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான அசுரன் படத்தினை  கோவா சர்வதேச திரைப்பட விழா’   திரையிட தேர்வாகியுள்ளது. இந்த படம் சம கால சாதி அரசியலை நேரடியாக பேசி இருந்தது. அசுரன் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று மிக பெரும் வெற்றி படமாக  அமைந்தது.

ALSO READ  குடியரசு தலைவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் !

ஆகையால் இந்த படத்தினை கோவா சர்வதேச திரைப்பட திரையிட தேர்வாகியுள்ளது.
அசுரன் படத்தோடு கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள விரைவில் திரையில் வெளியாகவிருக்கும் ’தேன்’ படமும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவில் வெளியிட தேர்வாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூரியிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி:

naveen santhakumar

நண்பர்கள் இருவரும் இப்போது எனிமி:

naveen santhakumar

மாநாடு படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கருத்து !

News Editor