சினிமா

மாஸ்டர் படத்தை லீக் செய்தவரை கண்டுபிடித்த படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை தொடர்ந்து படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.   


அண்மையில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து படக்குழு மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. அதனையடுத்து மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில், 400 சட்ட விரோத இணைய தளங்கள் மற்றும் 29 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ALSO READ  கர்நாடகா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு  நீக்கப்பட்டது : முதல்வர் அறிவிப்பு  

இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக  வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இது திரையுலகினரை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் மாஸ்டர் படத்தினை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்ட நபரை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனையடுத்து படத்தின்  காப்பியை யார் யாரிடம் கொடுத்தோம் என்று படக்குழு விசாரணையை தொடங்கிய நிலையில் வெளிநாடுகள் அனுப்புவதற்க்காக டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் காப்பியை கொடுத்துள்ளது படக்குழு. இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஒருவர் திருட்டுத்தனமாக படத்தினை பதிவு செய்து இணையத்தில் கசியவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ALSO READ  வெற்றி பட இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணையும் ஜி.வி பிரகாஷ்..! 

இதனையடுத்து அந்த நபர் மீது காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், குற்றம் செய்தவரை கண்டுபிடிக்க ட்விட்டர் நிறுவனமும் உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் படக்குழு தரப்பிலிருந்து கூறப்படுகிறது. 

#master #mastervijay #mastermovie #pongalrelese #masterleaked #tamilcinema #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உருவாகிறது புகழ் பெற்ற “அஞ்சாம் பாதிரா” படத்தின் இரண்டாம் பாகம் !

News Editor

நெட்ஃபிளிக்ஸிடம் பெரும் விலைக்கு போனதா கோப்ரா; விளக்கமளித்த படக்குழு !

News Editor

அனிச்சமலர் அழகே…நடிகை ராஷ்மிகா மந்தனா..

Admin