இந்தியா

கர்நாடகா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு  நீக்கப்பட்டது : முதல்வர் அறிவிப்பு  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதை தொடர்ந்து நேற்று முதல் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கை திரும்ப பெற்றதாக அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர்.

கொரோனா தற்போது மரபியல் மாற்றம் அடைந்து வீரியமிக்க கரோனா வைரஸின் புதிய வகை வேகமாக  பிரிட்டன் முழுவதும் பரவி வருகிறது . ஆகையால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறத்து பிரிட்டன் அரசு. உலகையே  தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை விட 70 % வேகமாக பரவுகிறது புதிய வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் பிரிட்டனில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  அதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் பிரிட்டனுக்கான விமான போக்குவரத்தை நிறுத்தியது மதியமைச்சகம்.

ALSO READ  மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்ல நாளை முதல் தடை

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 6 வரையில் அமல்படுத்தப்படுவதாகவும் இது  ஜனவரி 2-ஆம் தேதிவரையில் அமலில் இருக்கும் என்றும்  அம்மாநில அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது அந்த இரவு நேர ஊரடங்கை திரும்பப்பெறுவதாக கர்நாடக அரசு தீடிரென அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, இரவு ஊரடங்கு உத்தரவு தேவையில்லை என்ற பொதுமக்களின் கருத்தை கருத்தில் கொண்டு, இந்த முடிவு பரிசீலிக்கப்பட்டது, அமைச்சரவை சகாக்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இரவு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ALSO READ  İdman mərcləri və onlayn kazino 500 Bonus qazanın Giri

இருப்பினும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1XBET Azerbaycan İdman üzrə onlayn mərclər ᐉ Bukmeker şirkəti 1xBet giriş ᐉ aze 1xbet.co

Shobika

புகழ்பெற்ற சோம்நாத் கோவிலின் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு :

naveen santhakumar

திருப்பதியில் இனி நோ பிளாஸ்டிக் பாட்டில்.

naveen santhakumar