சினிமா

நெட்ஃபிளிக்ஸிடம் பெரும் விலைக்கு போனதா கோப்ரா; விளக்கமளித்த படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் அஜய் ஞானமுத்து டிமாண்டி காலனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து நயன்தாரா நடிப்பில் இமைக்க நொடிகள் படத்தை இயக்கி இருந்தார். விறுவிறுப்பான திரைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெளியாகி அனைவரின் கவனத்தியும் பெற்று, வசூல் ரீதியாகவும் வெற்றியை தேடி தந்தது.

இந்த இரு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் “கோப்ரா” என்ற புதிய படத்தினை தற்போது இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கே.ஜி.எஃ ப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி செட்டி நடித்து வருகிறர். மேலும் படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி. இர்பான் பதான், உள்ளிட்ட  பலரும் நடித்து வருகின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும்  இப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

நடிகர் விக்ரம் பல வேடங்களில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ரலாகியது குறிப்பிடத்தக்கது.  அண்மையில் வெளியான கோப்ரா படத்தின் டீசர், பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

ALSO READ  ஒரே ஒரு போன் கால்...விக்ரமோட மொத்த நிம்மதியும் போச்சு…..

இந்நிலையில் கோப்ரா படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான  நெட்ஃபிளிக்ஸ்   நிறுவனம் பெரும் தொகைகொடுத்து வாங்கியுள்ளதாக இணையத்தில் செய்தி வெளியாகியது. இத்தகவலை அறிந்த  பட தயாரிப்பு நிறுவனம் இச்செய்தியை முழுமையாக மறுத்து, இதனை தவறான செய்தி என தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

#cobratamilmovie #vikram #chiyaanvikram #tamilthisai #cobratesar #tamilthisai #vikram #tamilcinema #kollywood #tamilmovie #cinema #cinemaupdate


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் திருமணம் முடிந்துவிட்டது:

naveen santhakumar

லாஸ்லியாவிற்கு ஆறுதல் கூறிய வனிதா:

naveen santhakumar

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு சம்மன் :

Shobika