தமிழகம்

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் வைத்தே பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

சென்னை MGR சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,”மின்சார பஸ் போக்குவரத்து திட்டம் எந்த வகையிலும் கைவிடப்படாது. கொரோனா காலத்தில் கடந்த மாதங்களில் அதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ‘பார்ம்-2’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதில் மின்சார பஸ்களுக்கு மானியம் கொடுத்தார்கள். இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் நாட்டிலேயே முதல் முறையாக சி40 என்ற ஒப்பந்தத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். அதன்படி ஜெர்மன் ‘KFW’ வங்கியில் இருந்து கடன் உதவி பெற்று மின்சார பஸ் போக்குவரத்தும், பி.எஸ்.-6 ரக பஸ்களுக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

ALSO READ  சிலிண்டர் விலை உயர்வு பேரிடி… விமர்சித்த சீமான்!

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் வைத்திருந்தால் போதும். அவர்கள் இலவசமாக பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்”.இவ்வாறு அவர் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு !

News Editor

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

naveen santhakumar

இரண்டு நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

naveen santhakumar