சினிமா

காமெடி நடிகர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் மாநகரம். இப்படத்தில் ஸ்ரீ சந்திப் கிஷன், ரெஜினா கெசண்ட்ரா, சார்லி, முனீஷ்காந்த் போன்றவர்கள் நடித்திருந்தனர். அதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகிய இத்திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.  மக்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது.


குறிப்பாக லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு விஜய், கார்த்தி, கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கம் அளவிற்கு தற்போது  உயர்ந்துள்ளார். இந்நிலையில் ‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் குறித்தான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘மும்பைகர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா ஆகிய முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

ALSO READ  இந்தியாவில் 400-ஐ கடந்தது புதுவகை கொரோனா தொற்று !

அதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி எந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது குறித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஏற்ப படத்தின் திரைக்கதையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று !

News Editor

ரீ-மிக்ஸ் பாடல்கள் போர்… சொன்னது யார் தெரியுமா?

Admin

மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம் : நடிகர் விஜயிடம் வருமானவரித்துறை விசாரணை

Admin