உலகம்

முஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; பதவி ஏற்ற முதல் நாளே ஜோ பைடன் அதிரடி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜோ பைடன் அமெரிக்கா அதிபராக பதவி ஏற்ற முதல்நாளே முஸ்லிம்களுக்கான தடை நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். 78 வயதாகும் ஜோபைடன் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபர் என்ற பெருமைக்குரியவர். இந்நிலையில் ஜோ பைடன் அமெரிக்கா அதிபராக பதவி ஏற்ற முதல்நாளே முக்கிய நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

அதில், சுற்றுசூழலைப் பாதுகாக்கும் விதமாக உருவாக்கப்பட்ட பாரிஸ் பருவகால ஒப்பந்தத்தில் இருந்து, ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்கா வெளியேறியது. தற்போது பைடன் தலைமையிலான அமெரிக்கா மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் இணையவுள்ளது. இதற்கான நடைமுறைகளை தொடங்குவதற்கான உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். 

ALSO READ  ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு!
US-Mexico border

மெக்சிகோ – அமெரிக்கா இடையே தடுப்பு சுவர் கட்டுவதில் ட்ரம்ப் மிக உறுதியாக இருந்தார். சுவர் கட்டுவதற்கு நிதி அளிக்கும் விதமாக அவசரகால உத்தரவையும் பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவை ரத்து செய்துள்ளார் ஜோ பைடன்.

ஈரான், ஈராக், சிரியா, சோமாலியா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் அமெரிக்கா வருவதற்கு ட்ரம்ப் பயணத் தடை விதித்திருந்தார். அதனை பைடன் நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் டிரம்பின் பல முக்கிய ஆணையையும் ரத்து செய்துள்ளார் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன். 

ALSO READ  புதிய வைரஸ் தாக்குதலா??- 350-க்கும் மேற்பட்ட யானைகள் திடீர் உயிரிழப்பு…

#usa #america #joebiden #kamalaharris #americanpresident #46presidentjoebiden #tamilthisai #mushlimbanned #usaban


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஷ்யாவில் நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை…

naveen santhakumar

போராட்டம் நடத்தியவர்கள் மீது பாய்ந்த கார்….6 பேர் படுகாயம்….

naveen santhakumar

கொரோனா வைரஸூக்கு கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது….

naveen santhakumar