உலகம்

புதிய வைரஸ் தாக்குதலா??- 350-க்கும் மேற்பட்ட யானைகள் திடீர் உயிரிழப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தெற்கு ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில், கடந்த மே மாதத்தில் இருந்து இதுவரை 350க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் உயிரிழ்துள்ளன.

பிரிட்டனில் இருந்து இயங்கும், நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்த டாக்டர் நியால் மெக்கேன் (Dr Niall McCann) கூறியதாவது:-

கடந்த மே மாத துவக்கத்தில், ஒகவாங்கோ டெல்டா பகுதியின் மேல், விமானம் மூலம் தனது சகா ஒருவருடன் பறந்து கண்காணித்த போது, யானைகளின் இறந்த உடல்களை, உள்ளூர் பல்லுயிரின பாதுகாவலர்கள் பார்த்துள்ளனர்.

அதுகுறித்து, அந்நாட்டு அரசுக்கு அப்போதே தகவல் அளித்தனர். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மூன்று மணி நேரம் பறந்ததில், 169 யானைகளின் இறந்த உடல்களை கண்டுள்ளனர். இவ்வளவு குறுகிய நேரத்தில் இத்தனை உடல்களை பார்ப்பது என்பது மிகவும் அதிகமானது; ஆபத்தானது என்று கூறினார்.

மேலும் கூறிய டாக்டர் மெக்கேன்:-

ALSO READ  மத்தி மீனில் இவ்வளவு நன்மைகளா…

அதன் பின், எனது குழுவினருடன் நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தமாக 350க்கும் மேற்பட்ட யானைகளின் இறந்த உடல்களை கண்டோம். 

வறட்சியுடன் தொடர்பில்லாமல் ஒரே சமயத்தில் இத்தனை யானைகள் உயிரிழப்பது என்பது இதற்கு முன்பு கண்டிராதது.

இறந்த யானைகளின் உடல்களில் தந்தம் அகற்றபடவில்லை. யானைகளின் உயிரிழப்புக்கு வேட்டையாடப்பட்டதுதான் காரணம்’ என, போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது. 

ஒருவேளை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தும் சயனைடை உண்டிருந்தால் யானைகள் மட்டுமல்லாது பிற உயிர்களும் இறந்திருக்கும். ஆனால் இப்போது யானைகள் மட்டுமே உயிரிழந்துள்ளன.

கடந்த ஆண்டு ஆந்த்ராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. தற்போதும், நச்சு அல்லது நோய் தாக்குதலால் யானைகள் உயிர் இழந்திருக்க வாய்ப்புள்ளது. முகம் கண்ணில்படும்படி யானைகள் கீழே விழுந்து உயிரிழந்துள்ளன.

உயிருடன் இருக்கும் யானைகள், வட்ட வடிவமான பாதையில் நடக்கின்றன. 

ALSO READ  ஓமன் சுல்தான் காபூஸ் மறைவு- இந்தியா சார்பில் ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிப்பு

இதனால், யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதோ தாக்கியிருக்கக் கூடும். இத்தகைய நோய் மனிதர்களுக்கும் பரவும், குறிப்பாக நீர் மற்றும் மண் வழியாகப் பரவ வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே போட்ஸ்வான இன் வனவிலங்கு துறை (Botswana’s Department of Wildlife) அதிகாரிகள் இழந்த 280 யானைகள் தொடர்பான அறிக்கைகள் தயார் செய்துள்ளனர். மேலும் இறந்த யானைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு அனுப்பியுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆய்வகங்களிலிருந்து சோதனை முடிவுகள் வெளிவருவது தாமதமாகி உள்ளது என்றனர்.

வன உயிர்கள் பாதுகாப்பை பொறுத்தவரை இது மிகவும் பேரழிவுதான். இந்த நோய் யானைகளிடமிருந்து மனிதர்களையும் தாக்க வாய்ப்புள்ளது. இது, மனிதர்களுக்கான பொது சுகாதாரப் பிரச்சனையாக மாறும் வாய்ப்பும் உள்ளது. எனவே இதுகுறித்து உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்’ என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவை காக்க போதிதர்மன் வருகிறாரா?- நம்பிக்கையுடன் காத்திருக்கும் மக்கள்

Admin

என் சொத்து மதிப்பு 1.5 லட்சம் கோடி.. ஆனால் கையில ஒண்ணுமே இல்லை

Admin

இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய ஆல்ப்ஸ் பனிமலை…

naveen santhakumar