உலகம்

கொரோனா வைரஸூக்கு கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சியாட்டல்:-

அமெரிக்காவில் கொரோனா வைரஸூக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்தை ஜெனிபர் ஹாலர் என்ற பெண்மணிக்கு முதன்முதலில் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் உதவியோடு கெய்ஸர் பெர்மனன்ட் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் (Kaiser Permanente Washington Research Institute) இந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கெய்சர் ஆராய்ச்சி நிறுவன தலைவர் டாக்டர் லியா ஜாக்சன் கூறுகையில்:-

இந்த அவசர காலத்தில் ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை செய்ய விரும்புகிறார்கள். ஒருவருக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்து தரப்படுகிறது. இது14-14 என 28 நாட்களுக்கு கண்காணிக்கப்படும் என்றார்.

ALSO READ  இறுதிச்சடங்கின் போது கண் விழித்த சிறுமி!!!!!அடுத்து நேர்ந்த சோகம்…..

இதுகுறித்து ஜெனிஃபர் ஹாலர் கூறுகையில்:-

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பைப் பார்த்தேன். அவர்களை தொடர்பு கொண்டு பின்னர் அங்கு சென்றேன். சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதன்பிறகு தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தயாராக இருக்கும்படி கூறினார்கள்.

அதன்பின்னர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது இந்த இக்கட்டான நிலையில் என்னால் இயன்ற ஒரு சிறு உதவியை செய்துள்ளேன் என்றார். 

Courtesy.

தினசரி உடல் வெப்பநிலையை மற்றும் உடலில் மாற்றங்கள், அறிகுறிகள், பாதிப்புகள் உள்ளிட்டவற்றை மருத்துவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். உடல் பரிசோதனைகள் தினசரி மற்றும் வார இறுதியில் மேற்கொள்ளப்படும் என்றார்.

ALSO READ  தலிபான்கள் என்னை கொன்று விடுவார்கள் - அதிபர் அஷ்ரப் கனி…!

இந்த தடுப்பு மருந்து இவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கப்பட்டதற்கு காரணம் சார்ஸ் (SARS) மற்றும் மெர்ஸ் (MERS) வைரஸ்களின் கலவை என்பதால், இதற்கு முன்னர் SARS மற்றும் MERS கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளின் கலவை இந்த தடுப்பு மருந்து ஆகும்.

தடுப்பு மருந்து இவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கப்பட்டாலும் முழுமையாக மக்களை சென்றடைய கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஆகும் என்று கெய்ஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அண்டார்டிக் பிரதேசத்திலுள்ள தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….சுனாமி உருவாக வாய்ப்பு……

naveen santhakumar

ஜம்மு-காஷ்மீர் ஊரடங்கு வாழ்க்கையை படம் பிடித்த மூன்று பேருக்கு புலிட்சர் விருது…. புகைப்பட தொகுப்பு உள்ளே…

naveen santhakumar

சீன வீரர்கள் அத்துமீறி ஊடுருவல்-இருதரப்பினரிடையே மோதல்

naveen santhakumar