சினிமா

“டெனெட்” படத்தின் கதையிலிருந்து எடுக்கப்பட்டதா  மாநாடு; இயக்குனர் விளக்கம்! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர்  சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். அவரை தொடர்ந்து படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன், பிரேம்ஜி , எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர்கள் நடித்த் வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். 

மாநாடு திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.  அண்மையில் நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநாடு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து டீசரை பார்த்த ரசிகர்கள் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனெட் திரைப்படம் போல இருப்பதாக கூறி வந்தனர்.

இந்நிலையில் மாநாடு படத்தின் இயக்குனர் இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ” மாநாடு படத்தின் டீசரை மக்கள் டெனெட் படத்தோடு ஒப்பிடுவதை பார்க்கும்போது பெருமையாக உள்ளது.

ALSO READ  'அந்தகன்' பட டைட்டில் போஸ்டர் வெளியீடு..!

ஆனால் மாநாடு படத்திற்கு அந்த படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, உண்மையிலேயே எனக்கும் டெனெட் படம் புரியவில்லை. மாநாடு டிரைலருக்காக காத்திருங்கள், அதை பார்த்த பிறகு நீங்கள் வேறு ஏதேனும் படத்தோடு ஒப்பிடலாம்” என குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வைரலாகும் திரிஷாவின் மிஸ் சென்னை பட்டம் பெற்ற புகைப்படம்:

naveen santhakumar

ஆக்‌ஷனுக்கு பிறகு ரொமான்ஸில் இறங்கிய அண்ணாச்சி ! 

News Editor

“நான் 9 வருடங்களாக வந்து செல்கிறேன்”; காஜல் அகர்வாலை கவர்ந்த பொள்ளாச்சி மெஸ்…!

News Editor